வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை; என்ன செய்வது?
ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : வழிபாட்டு தலங்களுக்கு தடை
சென்னை : தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். ஜூன் மாதத்தில் இருந்து, கொரோனா தொற்று தாக்கம் குறையத் துவங்கியது. ஆனால், சில நாட்களாக மீண்டும் சற்று உயரத் துவங்கி உள்ளது. இந்நிலையில், கூடுதல் தளர்வுகளின்றி நடைமுறையில் இருந்த ஊரடங்கு, 9ம் தேதி காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
நோய் பரவல் வேகம் அதிகரிக்கும் முன், அதை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதையடுத்து முதல்வர் பிறப்பித்த உத்தரவு, தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடியஊரடங்கு ஆக. 23 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுளளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசு உத்தரவு திங்கள் (09.08.2021) அன்று காலை 6 மணியுடன் முடிவடைகிறது. தற்போது விதித்திருக்கும் புதிய உத்தரவு (09.08.2021) வருகிற திங்கள் கிழமை 6 மணிக்கு மேல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
ஆகவே இந்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிறு ஆராதனை நடத்தலாம். இதனை அரசு தெளிவுபடுத்தினால் நலமாயிருக்கும். மாவட்ட ஆட்சியரால் நாளைய மதவழிபாடு தடை செய்யப்படாத மாவட்டங்களில் நாளை சுத்திகரிப்பு மற்றும் சமுக இடைவெளி போன்றவற்றைப் பின்பற்றி ஆராதனை நடத்தலாம் என்பதை இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 13,14,15 மற்றும் 20,21,22 ஆகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கண்டிப்பாக வழிபாட்டு தலங்களில் இறைவழிபாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது
வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் தான் மத வழிபாட்டிற்கு தடை. இடைப்பட்ட நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை சமூக இடைவெளியுடன் ஆராதனை நடத்தலாமா என்ற ஒரு கேள்வி எழும்புகிறது.
இடைப்பட்ட நாட்களில் (திங்கள் முதல் வியாழன் வரை) மக்கள் அரசு வழிகாட்டுதலை மிக சரியாக பின்பற்றி பிராத்தனைக்காக இறைவழிபாடு தலங்களுக்கு வந்து செல்ல தடையில்லை. ஆனால் மத வழிபாடுகள் நடத்த அனுமதி உண்டா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உங்கள் பகுதிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஞானமாய், விவேகமாய் திட்டமிடுதல் காலச்சிறந்தது.
அரசு உத்தரவினை மதித்து நடப்பது நமது கடமையாக இருக்கிறது. விசுவாசம் என்ற பெயரில் அரசு உத்தரவை மீறி நாம் செயல்படும் பட்சத்தில் பலரை இழக்க நேரிடலாம். கடந்த கால கொரோனா அலை நமக்கு பாடம் புகட்டியிருப்பதை மறந்துவிட வேண்டாம்.
ஆன்லைன் மூலமாகவோ, தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவோ மக்களுடன் தொடர்பில் இருப்போம். சவாலான இந்த காலத்தினை சிறப்பாக எதிர்கொள்ள தேவன் நமக்கு திட்டங்களை தருவாராக.
இம்மட்டும் வா மிஞ்சி வராதே என கடலுக்கு கட்டளையிட்ட தேவனிடம் தொடர்ந்து ஜெபிப்போம். கொரோனாவின் மூன்றாவது அலை நம் எல்லைகளில் வராதபடி தேவன் பாதுகாப்பாராக. இன்னும்மொரு தேவ ஊழியரை நாம் இழந்து விட கூடாது என்பதில் மிக கவனமாயிருப்போம்.
சபை ஒருபோதும் ஒரு நாளும் பூட்டப்படாது. கரணம் சபை என்பது கண்கள் காணும் கட்டிடமல்ல. கட்டிடங்கள் பூட்டியிருக்கலாம். ஆனால் மனதால் இணைவோம். தூரத்துக்கும் சமீபத்திற்கும் தேவனாயிருக்கிறவரை தடையில்லாமல் ஆராதிப்போம்.