காரிலிருந்தபடி கிறிஸ்துமஸ் கொண்டாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள்.. இங்கிலாந்தில் ஒளிரும் ரயில் சேவை

Share this page with friends

வாஷிங்டன்: உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ளன.

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, கிறிஸ்துமஸ் அதனைத் தொடர்ந்து வரும் புத்தாண்டு என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி விடும். ஆனால் கொரோனா பரவலால், கொண்டாட்டங்கள் தாமதமாக தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் லட்சக்கணக்கான மக்களைக் ஈர்க்க கண்ணைக் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுரங்க வடிவிலான பாதை, அலங்கார வளைவுகள், மரங்கள், செடி கொடிகள் என அனைத்தும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளிரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இவற்றை காரில் இருந்தபடியே பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்.

பிரத்யேக மேடையில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா, கார்களில் வரும் குழந்தைகளுக்கு கையசைத்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

இங்கிலாந்தில், கிறிஸ்துமஸை கொண்டாடும் வகையில் ஒளிரும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரு நகரங்கள் இடையே பயணிக்கும் இந்த ரயிலில் 13,000 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.null

பயணிக்கும் பாதை எங்கும் ஒளி ஏற்படுத்திச் செல்லும் இந்த ரயில், இரவில் நகரும் நட்சத்திரக் கூட்டங்களை போலத் தோற்றமளிப்பது பொது மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Thanks: One India Tamil


Share this page with friends