Pray for a few things related to marriage.

காதலர் தினம்: ஈசாக்கின் காதல்!

Share this page with friends

ஈசாக்கு நாற்பது வயதுவரை
யாரையும் எட்டிப் பார்க்காதவன்
மதுவையோ மாதுவையோ
தொட்டுப்பார்க்காதவன்

தனக்குப் பெண்ணை தேடி
எலியேசர் சென்றிருந்தபோதுகூட
அதைப் பற்றி பகல் கனவு காணாமல்

பகலின் குளிர்ச்சியான நேரத்தில்
தேவனைத் தேடி, தியானம்பண்ண
வெளியில் போயிருந்தான் (ஆதி.24:63)

அவன் ரெபெக்காளின் புருஷனாவதற்கு முன்பே
தியானப் புருஷனாய் இருந்தான்!

தியான வேளையில்
அவனது வாழ்க்கைத் துணை
அவனைத் தேடிவந்தது
கர்த்தரே அழைத்துவந்தார்

ஈசாக்கு கண்களை
ஏறெடுத்துப் பார்த்தபோது
ரெபெக்காள் ஒட்டகத்தை விட்டிறங்கி
நின்றுகொண்டிருப்பதை பார்த்தான்
அழைத்துவந்த எலியேசேர்
அனைத்தையும் விவரித்துச் சொன்னார்

ஈசாக்கு ரெபெக்காளைத்
தன் தாயின் கூடாரத்திற்கு
அழைத்துக்கொண்டுபோய்
அவளைத் தனக்கு
மனைவியாக்கிக்கொண்டு
அவளை நேசித்தான்.

அவனைப் பொறுத்தமட்டில்
அவளை நேசிக்க அதாவது
காதலிக்க ஆரம்பித்தது
எப்போதென்றால்
அவளைக் கரம்பிடித்த பின்னரே
மனதார நேசித்தான்
என்று சொல்லுவேன்

தன் தாய் சாராளுக்காக
கொண்டிருந்த துக்கம் நீங்கி
ஆறுதல் அடைந்தான்

உன் வீட்டுக்கு வருகிற மனைவி
உன் துக்கத்தை ஆற்றுகிறவளாய் இருக்கவேண்டும்
துக்கத்தைக் கூட்டுகிறவளாய் இருக்கக்கூடாது

ஈசாக்கு LOVE பண்ணி
கல்யாணம் பண்ணவில்லை
கல்யாணம்பண்ணி LOVE பண்ணினான்!

ஆழ்ந்த நித்திரையில் இருந்த ஆதாம்
கண்களை விழித்துப் பார்த்தபோது
கண்ணெதிரே ஓர் அழகிய பெண்
நிற்பதைக் கண்டான்

விழித்தவுடன் அவளை ஏறிட்டுப்பார்த்து
ஏவாள் என்று பெயரிட்டான்

ஆதாம் உறங்கிக்கொண்டிருந்தபோது
தேவனால் உருவாக்கப்பட்டவள்தான் ஏவாள்

ஈசாக்கு போல தியானம்பண்ணிவிட்டு
ஆதாம் போல உறங்கிவிடுங்கள்
கர்த்தர் பார்த்துக்கொள்வார்

கர்த்தர் நன்மையானதைத் தருவார் (சங்.85:12)
மனைவியைக் கண்டடைகிறவன்
நன்மையானதைக் கண்டடைகிறான்
கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
(நீதிமொழிகள் 18:22)

இளம் யோசேப்புக்களே,
இளம் தீமோத்தேயுக்களே,
ஈசாக்குகளே ,
எஸ்தர்களே ,

சிம்சோன் போல
SIM CARD ஐ போட்டுக்கிட்டு
ZONE விட்டு ZONE போய்
பெலனை இழந்துபோகவேண்டாம்

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு
ஆயத்தம்பண்ணினவைகளைக்
கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை,
அவைகள் மனுஷனுடைய
இருதயத்தில் தோன்றவுமில்லை;
நமக்கோ தேவன் அவைகளைத்
தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்;
அந்த ஆவியானவர் எல்லாவற்றையும்,
தேவனுடைய ஆழங்களையும்,
ஆராய்ந்திருக்கிறார்.(1 கொரிந்தியர் 2:9,10)

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன் முழு இருதயத்தோடும்
கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம்
அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன் பாதைகளைச்
செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:5,6)

TCN MEDIA

காதலர் தினம் பற்றிய உண்மை சரித்திரத்தை நீங்கள் அறிய விரும்பினால் கீழே உள்ள பதிவிற்கு வாருங்கள்..

பிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்

பிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்


Share this page with friends