தமிழ்நாடு மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Share this page with friends

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.

மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள்  சார்பில் இந்த தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கட்டுமான பணிகள் தொடர்ந்ததால் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான மானாமதுரையைச் சேர்ந்த மாரிமுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தார்.


Share this page with friends