வாழவைத்து வாழ்ந்துகாட்டு – உண்மை சம்பவம் (சிறுகதை)

Share this page with friends

வாழவைத்து வாழ்ந்துகாட்டு

இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். ,

இறுதி சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்துவிட்டோமென்று (எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்தில்) நினைத்துக்கொண்டு நின்று விடுகிறார், ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இதல்ல முடியும் எல்லை என்று கூச்சலிடுகிறார்,  ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவரும் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்கு தள்ளி எல்லையை கடக்க வைக்கிறார் . போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்க ஏன் இப்படி செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்றுவிட்டார் , அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . என்று சொல்லி விடை பெற்றார் .  .நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாதென்று சொல்லித்தருவோம்.


Share this page with friends