விசுவாசத்தின் பல அளவுகள்
பிரசங்க குறிப்பு: விசுவாசத்தின் பல அளவுகள்
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். எபி : 11 : 6
இந்தக் குறிப்பில் விசுவாசித்தின் பல அளவுகளைக் குறித்து சிந்திக்கப் போகிறோம். ஒவ்வொருவருக்கும் எந்த அளவு விசுவாசம் தரப்படுகிறது என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். கிறிஸ்துவ ஜீவியத்தில் விசுவாசமானது மிக பெரிய ஆயுதம். விசுவாசமில்லாமல் நம் தேவனை பிரியப்படுத்த முடியாது கூடாது விசுவாசத்தை வகைப்படுத்தி எப்படி எந்த அளவு தரப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்
இல்லாத விசுவாசம் இது அவிசுவாசியின் அளவு (மாற்கு : 4 : 40)
அற்பமான விசுவாசம் சந்தேகப்படுகிறவர்களின் அளவு (மத் : 16 : 8)
பெருகுகிற விசுவாசம் ஆரோக்கியமான விசுவாசிகளின் அளவு (2 தெச : 1 : 3)
வல்லமையின் விசுவாசம் முழுதுமாய் தேவனை சார்ந்தவர்களின் அளவு (ரோமர் : 4 : 21)
நிறைந்த விசுவாசம் பயமில்லாத சாட்சியாளர்களின் அளவு. (அப் : 6 : 8)
விசுவாசத்தின் பல வகையும் , விசுவாசத்தின் பல அளவுகளையும் இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். நாம் எப்படிப்பட்ட எந்த அளவு விசுவாசமுடை அவர்களாக நாம் இருக்கிறோம். ஸ்தேவான் வல்லமை நிறைந்த விசுவாசித்தில் காணப்பட்டான்.
ஆண்டவர் அவனுக்கு விசுவாசத்தை அளவில்லாமல் ஊற்றியிருந்தார். நமது விசுவாசத்தை நாம் தான் பெருக்கிக் கொள்ளவேண்டும். விசுவாசத்தில் நம்மை நிறைவாக்கிக் கொள்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur