பல வகை கண்ணீர்

இயேசு கண்ணீர் விட்டார். யோவா : 11 : 35
இந்தக் குறிப்பில் பலவகை கண்ணீர் என்று சிலர் கண்ணீர் விட்டு அழுதவர்களைக் குறித்து சிந்திக்கலாம். இயேசுவே கண்ணீர் விட்டார் என்று வேதம் சொல்கிறது. அநேகர் தங்களது தீராத துக்கம் கண்ணீராக வருகிறது. பலதரப்பட்டவர்களின் பலவகை கண்ணீராக இந்த குறிப்பில் கவனிக்கலாம். இயேசு கண்ணீரை துடைக்கிறவர் ஆனால் அவரே கண்ணீர் விட்டார். தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு நீங்கள் காணப்படும் போது தேவனது இரக்கம் உங்கள் மேல் வரும். பலவகை கண்ணீரை இங்கு பார்க்கலாம்.
- மீட்பரின் கண்ணீர்
லூக் : 19 : 41
யோவா : 11 : 35 - பாவ உணர்வடைந்த பாவியின் கண்ணீர்
லூக்கா : 7 : 38 — 44 - பரிசுத்தவான்களின் கண்ணீர்
யோவா : 20 : 11
அப் : 20 : 37 - ஒரு ஊழியக்காரனது கண்ணீர்
அப் : 20 : 19 — 31
பிலி : 3 : 18 - பின்வாங்கி போனவனின் கண்ணீர்
லூக் : 22 : 62 - கெட்டுப் போன பாவிகளின் கண்ணீர்
மத் : 8 : 12 , 22 : 13.
இந்தக் குறிப்பில் பலவகை கண்ணீரை குறித்து சிந்தித்தோம். ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்திற்காக , தாம் செய்த தவறுக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.