சரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக!

சில கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்…
வெளியுலகத்தில் நாம் இப்போது…இதற்கு ஒரே தீர்வு..1.பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், 2 மணம்திரும்புங்கள், 3. ஜெபம் பண்ணுங்கள் 4. கிறிஸ்துவை ஏற்று கொண்டு நன்மை செய்யுங்கள்.என்று எப்படி சொன்னாலும் அவர்கள் ஏற்று கொள்வதில்லை…மாறாக அவைகள் நகைப்பாகவே அவர்களுக்கு இருக்கும்….கிறிஸ்தவ உலகமே கிறிஸ்துவின் இந்த கால சத்தியத்திற்கு செவி கொடுக்க வில்லை பின்னர் எப்படி உலகத்தாரிடம் இவைகளை எதிர்ப்பார்க்க முடியும்….
எனவே (நம்மையும் சேர்த்தே) எல்லாரும் பாதுகாப்புக்காக இருக்க வேண்டும், தப்ப வேண்டும், நோய் வராமல் தடுக்க வேண்டும், உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள், இருப்பார்கள் அதுதான் உண்மையும் கூட.ஏனெனில் எல்லாரும் இவைகளை அறிவு பூர்வமாக சிந்தித்து, அறிவியல் அறிவு மூலம் தீர்மானம் எடுக்க முயன்று வரும் போது நாம் விசுவாசத்தின் அடிப்படையில், தெய்வீகத்தை கொண்டு, வேத சத்தியங்களை கொண்டு என்ன சொன்னாலும் இப்போது அவைகள் எடுபட போவதில்லை.(மெய்யான சத்தியம் நமது பாதுகாப்பு, ஆரோக்கியம் எல்லாம் கிறிஸ்துவில் தான் இருக்கிறது, இவைகளை சொன்னால் யாரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதே கடைசிக் காலத்தின் அறிகுறி.)
எனவே நாம் இவிதமான வேத சத்தியங்களை சொல்லும் போது அவர்களுக்கு நகைப்பாக தோன்றும், பைத்தியமாக கூட தோன்றும், நம்மை கிறிஸ்தவ சங்கி என்றும் பெயிரிடுவார்கள். இது நோவாவின், லோத்தின் காலத்தில் நடந்த ஒன்று தான் அதினால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனாலும் சத்தியத்தை சொல்லி கொண்டே தான் இருக்க வேண்டும் அது ஒரு பகுதி, என்றாலும் நாம் அறிவு பூர்வமாக சிந்தித்தால் கூட சில கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். அதுமட்டுமல்ல நமது பார்வை அறிவு ரீதியாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் சத்தியமும் மீற படகூடாது. கீழ்கண்ட சில கேள்விகளுக்கு நமது தேடல்கள் பதில் சொல்லட்டும்..
- முன் கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு ஊசிகள் மிஷனரி மருத்துவர்களால் பெரும்பாலும் மக்களின் சேவை மனப்பான்மையில் பல உள்கட்ட சோதனைகளை தாண்டி பல வருட இடைவெளியில் சோதனையிட ப்பட்டு, பரிந்துரைக்க பட்டவைகள் அவைகளால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் இல்லாத நிலை தான் ஏற்பட்டு இருக்கிறது. நாம் அவைகளால் பயன் பெற்று இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகம் இல்லை காரணம், அவைகளை கொண்டு மனிதன் பயன் அடைந்தான்.
இன்று
அவசர கதியில், அறிவியல் வளர்ச்சி என்று, அந்த விதி முறைகள் மீரபட்டு அவசர கதியில் வியாபார நோக்கில், தங்கள் வலிமையை காட்ட ஒவ்வொரு நாளும் பல அறிவிப்புகள் உடன் வருவதை பார்க்கும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
- இன்றைய தடுப்பூசிகள் அனைத்துமே இந்த covid 19 விசயத்தில் குறைந்த கால அனுபவம் கொண்டவை. அவைகளில் வளர்ச்சி பெற்ற அறிவியல் implementation மற்றும் பிஸினஸ் competition தான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
- மிருக DNA மற்றும் அதற்கு ஒத்த காரியங்களில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று அதே மிருக சூபா வங்கள் இன்னும் மனிதனுக்கு குள் புகுத்தி கொடூர பாவங்கள் மனிதனுக்குள் செயல்பட இவ்வித தடுப்பூசிகள் உதவி செய்கின்றன என்கிற ஒரு school of thought இருக்கிறது. பன்றியின் DNAமாதிரியில் இருந்து பெறப்பட்ட அந்த vacine நமது சரீரத்தில் செயல்படும் போது அதே சுபாவம் உள்ளே நம்மையும் அறியாமல் உள்ள புகுந்து தூண்டி விடுகிறது என்று இந்த school of thought சொல்கிறது.
- நோயின் தாக்கம் கண்டு, இதை கட்டாயம் செய்யும் நோக்கில், இதனுடைய பின்னணியத்தை ஆராயாமல் கண்ணை மூடி கொண்டு நாம் எடுக்க வேண்டுமெனில், கூட அதற்கு ஒரு நம்பிக்கை தேவை, அப்படியென்றால் இதற்கு கர்த்தரை அல்லது அரசாங்கத்தை, மருத்துவர்களை, அறிவியலை நம்பி எடுக்க போகிறோமா? அல்லது கர்த்தருடைய வார்த்தையை மட்டும் நம்பி அவரை விசுவாசிக்க போகிறோமா? உடனடியாக கர்த்தர் ஞானம் கொடுத்து கண்டுபிடித்தார்கள் என்று சவால் பேசி உண்மையை ஆராயாமல் விடவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதற்கு தேவ ஞானம், அவரது வழிநடத்துதல் மிகவும் அவசியம். ஏனெனில் நாம் உலகத்தில் இருந்தாலும் உலகத்தார் அல்லவே!
சரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக! வாழ்த்துக்கள்
செலின்