பரிசுத்தவான்கள் தங்கள் மதிகேட்டுற்கு திரும்பாதிருப்பார்களாக!

Share this page with friends

நாம் நீதிமான்களாக, பரிசுத்தவான்களாக கிறிஸ்துவில் அழைக்கப்பட்டு இருந்தாலும், ஒரேயடியாக நாம் அந்த நிறைவில் வந்தடைவதில்லை. முன்னே அந்தகாரத்திலும், பாவத்திலும், உலகத்திலும், இருளிலும் வாழ்ந்து வந்த நம்மை அவரது இரத்தத்தால் மீட்டு, வசனத்தை கொண்டு சுத்திகரித்து, தண்ணீர் முளுக்கினால் கழுவி, பரிசுத்த ஆவியின் துணை கொண்டு பரிசுத்தமாக நம்மை அவர் மாற்றி இருந்தாலும், அநேக வேளைகளில் நாம் நமது சில பெலவீனங்களால், மதியீனங்களால், தவறு இழைத்த விடுகிறோம். எனவே இந்த பதிவில் அவைகளை குறித்த தெளிவை புரிந்து கொள்ள கர்த்தர் கிருபை தருவாராக!

A. நாம் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சகதி நமது ஆடையில் படுவதற்கு நாம் தவறு செய்யாவிட்டாலும் வாய்ப்பு உண்டு. நாம் எத்தனை பாதுகாப்பு உடன் இருந்தாலும் ரோட்டில் நடக்கும் போது, பலவேளைகளில் சகதி நமது வஸ்திறத்தில் பட்டு விடுகிறது. அதே போல, ஊழியவிசங்களில் ஈடுபடும் போது, சில பிரச்சனைகளை கையாளும் போதும், சிலருக்காக பரிந்து பேசும் போதும், நம்மை அறியாமல் பிறர் மூலம் வரும் வசை சொல்கள், பழி சுமத்தல்கள் போன்றவற்ற்கு கர்த்தரே பரிகாரம் செய்வார். பிரதான ஆசாரியன் யோசுவா வாவின் அழுக்கு வஸ்த்திறத்தை மாற்றி, பிசாசின் கையில் இருந்து நம்மை defend செய்து தர்க்காத்து கொள்வார் என்பதில் எந்த சந்தேகம் வேண்டாம். ஆனால் இவைகளை சாக்குபோக்காக கருதி தொடர்ந்து பாவம் நம்மை ஆளுகை செய்ய விட்டு கொடுத்தால் நாம் சீக்கிரம் நமது மதிகேட்டிர்க்கு திரும்பி பெல்வீனப்பட்டு விடுவோம் என்பதையும் மறந்து போக கூடாது. எனவே தீமையை அல்லது உலக இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்றவாறு ஒருபோதும் நன்மை செய்வது போன்ற சூழலை உருவாக்கி கொள்ளாமல் தீமையை தீமை என்று எண்ணி பாவத்திற்கு விலகி நன்மை செய்ய வேண்டும். ஏனெனில் பாவம் செய்ய ஏதுவான சூழல் கொண்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு அதிக ஞானத்தோடு வாழ கர்த்தர் கிருபை தருவார்.

B. நாம் இன்னும் இந்த ஜென்மசரீரத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வு எப்போதும் நமக்கு வேண்டும்.

எத்தனை மகிமை நிறைந்த வெளிப்பாடுகள், அனுபவங்கள், வல்லமையான உணர்வுகள், பரிசுத்த உணர்வுகள் நாம் பெற்று இருந்தாலும், இவைகளை எல்லாம் இந்த மண்பாண்ட சரீரத்தில் பெற்று இருக்கிறோம் என்கிற நல்ல உணர்வு நமக்கு வேண்டும். நமது சரீரத்தில் மாம்சம் இருக்கிறது, சாவுக்கேதுவான் essence இருக்கிறது, அழிவுக்கு ஏதுவான வித்து இருக்கிறது, ஜென்ம ஆதாமிய பாவங்கள் இருக்கிறது என்பதை அடிக்கடி ஞாபக படுத்தி கொள்ள வேண்டும். இவைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அழிக்கவே தான் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவில் சிலுவையில் சார்ந்து, அவரது இரத்தத்தில் நம்மை தோய்த்து, அவரது வசனத்தில், பரிசுத்த ஆவியின் துணைகொண்டு மனம் திரும்பி இந்த பாவம் செய்ய தூண்டும் இந்த பிரமாணத்தை அழித்து, ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து, நமது சரீரம் கிறிஸ்துவின் சாரீரமாக இருக்கிறது என்கிற உணர்வில் சுகத்தின் மேல் சுகம் அடைந்து, பரிசுத்தம் மேல் பரிசுத்தம் அடைந்து, மருரூபமாக மாறி கிறிஸ்துவின் சாயலில் வாழ்ந்து, ஜென்ம சாரீர பாவ வல்லமைகளை அழிக்க வேண்டும். கர்த்தர் பார்த்து கொள்வார், என் பாவம் அது ஒரு சுபாவம் என்று இருந்து விடாதபடி அனுதினமும் சாக விட்டு கொடுக்க வேண்டும் இல்லையெனில் பாவம் பெலங்கொண்டு நம்மை அதுவே சிறைப்பிடித்து விடும்.

C. பிறரது பலவீனத்தை சூட்டி காட்டி, அவர்களை மொத்தத்தில் பாவி என்று ஆக்கினைகுட்படுத்தும் குற்றபடுத்தும் ஆவியை நம்மை விட்டு துரத்த வேண்டும்.

பிறரது செய்கைகளை கவனத்தில் கொண்டு பிறரை மொத்தத்தில் ஒரு condemnation ஆவிக்குள் புகுந்து விடக்கூடாது. பிரச்சனையை பிரச்சனையாக பார்த்து மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும். பிறரது பிரச்சனையை பேசி நாம் நிரைவானவர்களாக மாற முடியாது. நாம் பேசும் ஒரு பிரச்சனையை விட தேவன் முன்பாக அவர்கள் நிறைவாக இருக்க முடியும் ஏனெனில் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கொடுத்த அளவின் படியேயும், கிருபையின் படியேயும் தான் கர்த்தர் நியாயம் தீர்ப்பார். எனவே நாம் ஒவ்வொரு வரும் அவனது காரியங்களை நோக்கி அவைகளில் செயல்பட வேண்டும். அதற்காக எல்லா மனிதருக்கும் இடையில் சில பலவீனங்கள் இருக்கிறது என்று அதை பாவம் செய்யும் அளவுகோலாக மாற்றவும் கூடாது. நமது பலவீனங்களை அடையாளப்படுத்தி அவைகளில் ஜெயம் பெறுவதை விட்டு விட்டு பிறரது பெலவீனங்ககளில் சந்தோசம் அடைந்து புளங்காகிதம் அடையும் சுபாவம் நம்மை விட்டு மாறவே வேண்டும்.

D. கடைசியாக கர்த்தரின் கிருபை மற்றும் அவரது சத்துவத்தில் பெலப்பட்டு கிறிஸ்துவில் வளர வேண்டும்.

நம்மை விழாமல் காப்பதும், விழுந்ததால் மனம் திரும்பும் போது நம்மை தூக்கி விடுவதும் அவரது கிருபையே! எவ்வளவு பரிசுத்தவான் என்கிற பெயர் நமக்கு இருந்தாலும் முடிவில் கிருபை தான் நம்மை மீட்டு கொள்கிறது. எனவே பரிசுத்த பவுல் சொல்கிறது போல, மிகுந்த கண்ணீரோடு, மிகுந்த மனத்தால்மையோடு, கர்த்தருக்கு பயப்படுகிற, பயபக்தியோடு கிருப்பாசனத்தண்டயில் சேருவோம் ஏனெனில் அவர் பட்ச்சிக்கிற ஆக்கினியாக இருக்கிறாரே! அதே நேரத்தில் மிகுந்த மிருபையுள்ளவாராகவும் இருக்கிறாரே!.

கர்த்தர் நல்லவர், பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படும் நாம் நமது மதிகேட்டிர்க்கு திரும்பாமல் இருப்போமாக!

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends