என் வாயின் வார்த்தைகள் உமது சமுகத்தில் பிரிதியாயிருப்பதாக

Share this page with friends

என் வாயின் வார்த்தைகள் உமது சமுகத்தில் பிரிதியாயிருப்பதாக – சங் 19-14

இது தாவிதின் ஜெபம். நீங்கள் இந்த காரியத்திற்காக ஜெபித்தது உண்டா ? நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் தேவனுக்கு பிரியமான வார்த்தைகள்தானா ? ஒரு தேவனுடைய பிள்ளை இரவு படுக்கும் போது இன்று முழுவதும் நான் பேசிய வார்த்தைகள் தேவனுக்கு பிரியமான வார்த்தைகள்தானா ? என்று சோதித்து பார்க்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகள் பேசி இருந்தால் தேவ சமுகத்தில் பாவ அறிக்கை செய்ய வேண்டும். என் நாவினால் பாவம் செய்யாதபடிக்கு நான் என் வழிகளை காத்து – சங் 39-1 என்கிறான் தாவிது. வீணரோடு (வீண் பேச்சு பேசுவர்கள்) நான் உட்காருவதில்லை (சங் 26-4) நாவும் நெருப்பு. நாவானது முழு சரிரத்தை கறை படுத்துகிறது (யாக் 3-6) யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை (யோபு 2-10) உன் மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடம் கொடாதே (பிரசங்கி 5-6) ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும் – (1 கொரி 15:33) வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனை தீட்டுபடுத்தும் (மத் 15:11) உங்கள் வார்த்தைகளினால் கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள் (மல்கி 2:17) மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாத்திர்ப்பு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் (மத் 12-36) உதடுகளை விரிவாக திறந்தால் கலக்கம் அடைவோம் (நீதி 13:3)

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவ பக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். (யாக்கோபு 1:26) அதற்காக பேசாமல் உம் என்று இருக்க கூடாது. மற்றவர்களுக்கு பிரயோஜனமான, பக்தி விருத்தியை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசலாம் (எபேசி 4:29)


Share this page with friends