நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக

Share this page with friends

சிறு தியானம்

“நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருப்பீர்களாக” (லேவி 20:26)

நாம் நம்மை பரிசுத்தமாய் காத்துக் கொண்டால்…..

1.நம்மைப் பற்றிய தேவனுடைய தரிசனங்கள் நிறைவேறிடும். (ஆதி 37:6,7, 50:18)

தேவன் தனக்கு காண்பித்த தரிசனத்தை பற்றிக் கொண்டு நின்ற
தேவ மனிதன் யோசேப்பு. உன்னைப் பற்றிய பரலோக திட்டங்கள் உனது வாழ்வில் நிறைவேறிடக் கூடாது என்பதில் சாத்தான் மிகவும் கவனமாய் இருப்பான். எனவே நீ பாவத்தோடு இணைந்துவிடும்படி எப்போதும் வாய்ப்புகளை தந்து கொண்டே இருப்பான் சாத்தான். (ஆதி 39:8,9) விலகி ஓடிக் கொண்டேயிரு. தரிசனம் நிறைவேறுதல் என்னும் சிகரத்தை நீ நிச்சயம் அடைவாய்.. தெய்வ பயமானது பாவத்திற்கு விலகியோடிடும் பெலனை உனக்குத் தந்திடும்.(நீதி 14:27)

2.நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்து முடிப்போம். (2இராஜ 9:7,30,33,34)

யெகூவின் முடிவு சரியில்லை என்றாலும், அவனுடைய ஆரம்பம் மிகவும் அருமையானதாக இருந்தது. ஆகாப்பின் குடும்பத்தைக் குறித்த தேவ திட்டத்தை அப்படியே நிறைவேற்றினான் இந்த யெகூ. தன் கண்களுக்கு மையிட்டு, தன்னை சிங்காரித்துக் கொண்டு, யெகூவை மயக்க நினைத்தாள் யேசபேல். ஆனால் அவளை மிதித்துக் கொண்டு, அவளை நாய்களுக்கு இரையாக்கினான் இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட யெகூ. நிரம்பி வழிந்தோடும் அபிஷேகமானது, மாயைக்கு உன்னை மயங்க விடாது. மாறாக, தேவ சித்தத்தை செய்து முடித்திடவே தெய்வீக அபிஷேகம் உன்னை அழைத்துச் செல்லும். (சங் 45:7)

3.நம் வழியாக உலகம் தேவனை அறியும். (தானி 6:26,27)

தீட்டுப்பட்டு விடக்கூடாது என்று இளவயதில் எடுத்த தீர்மானத்தால், அந்நிய தேசத்தில் யேகோவா தேவனுக்காக மாபெரும் காரியங்களை சாதித்தான் தானியேல். தானியேல் மீது தனது தாக்கத்தை காண்பித்து, அவன் மீது ஜெயம் பெற்றிட நினைத்தது மகா பாபிலோன். தனி மனிதனாய் நின்று,
பாபிலோனின் தாக்குதல்களை எல்லாம் தகர்த்தெறிந்தான் தானியேல். (தானி 1:8,6:26,27)

சிறுவயதினிலே இந்த தானியேல் கற்றுக் கொண்ட வேத எழுத்துக்கள் அவனது உள்ளத்தில் இருந்ததால், கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்தான் பாபிலோனின் இருந்தபோதிலும் கூட. (சங் 40:8, ஏசா 48:14).

4.நம்மை மற்றவர்களுக்கு முன்பாக சாட்சியாக தேவன் நிறுத்துவார். (எரே 35:16)

ரேகாபின் குமாரர் தங்கள் தகப்பனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, திராட்சரசத்திற்கு
தங்களை விலக்கிக் காத்துக் கொண்டதால், தேவன் அந்த குடும்பத்தை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக காண்பித்தார். கிறிஸ்தவர்களாகிய நாம் காட்சிப் பொருளாக அல்ல, கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்கும்படியாகவே தேவன் நம்மை அழைத்து இருக்கிறார். (அப் 1:8)

உங்களை அழைத்தவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள்
எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். (1 பேது 1:15)

பரிசுத்த அலங்காரமே
ஜொலித்திடவே வாழ்வோம்
பரமன் இயேசுவுக்கே
சாட்சியாய் நின்றிடுவோம்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்க...
OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.
2021 ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சபைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள்
சிலந்தி பூச்சுகளுக்கு பெரும்பாலும் 8 கண்கள்
தவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்
ஜாதகம் உண்மையா? அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும்
வழக்கமுடையவர்களாக இருங்கள்
நம் நித்திய அழைப்பு என்ன?
பெந்தேகொஸ்தே ஞாயிறு
போக்குவரத்து பற்றிய தீர்க்கதரிசனம்.

Share this page with friends