கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.

Share this page with friends

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கிருத்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ திருச்சபை பேராயர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, தென்னிந்திய திருச்சபை, திருச்சி, தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன், தென்னிந்திய திருச்சபை வேலூர் திருமண்டல பேராயர் சர்மா நித்தியானந்தா, அட்வர்ன்ட் திருச்சபைகளின் பேராயர் எம்.ஜி.பக்தசிங் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான, திமுக தேர்தல் அறிக்கையில் சேர்த்திட சில கோரிக்கைகளை முன் வைத்தனர். நிகழ்ச்சியின் போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன் (14 நவம்பர் 2020)


Share this page with friends