நள்ளிரவு, நல் இரவாக மாறியது… வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends

நடு ராத்திரியிலே
பவுலும் சீலாவும்
ஜெபம்பண்ணி
தேவனைத் துதித்துப் 
பாடினார்கள்

(அப்போஸ்தலர் 16:25)

நள்ளிரவு,
நல் இரவாக
மாறியது     .

நடபடி, படி நட
அதுதான்
அப்போஸ்தலர் நடபடி

இது ஐந்தாவது
சுவிஷேச புத்தகம்  

சுவிசேஷ ஊழியத்தில்
பாடுகளும் சவால்களும்
பலமுறை பவுலையும்
அவரோடு இருந்து ஊழியம்
செய்தவர்களையும்
பதம்பார்த்திருக்கிறது.
யோர்தான் நதியளவு தண்ணீர்
அவர்கள் முகத்தில்
மோதியிருக்கிறது
(யோபு 40:23)

கர்த்தர் பவுலையும்
சீலாவையும் குறித்து
சாட்சி கொடுப்பாரானால்
பயந்தோடாத பரிசுத்தவான்கள்
என்றுதான் சொல்லுவார்.

பவுலும் சீலாவும்
பிலிப்பி பட்டணத்தில்
தங்கியிருந்து
ஜெப ஊழியத்தையும்
சுவிஷேச ஊழியத்தையும்
செய்துகொண்டுவந்த நாட்களது.

ஆவியானவர் அருளிய
தரிசனத்தின்படியும்
கர்த்தருடைய
அழைப்பின்படியும்தான்
ஊழியம் நடைபெற்றுவந்தது (அப்.16:9,10) 

கிரேக்கனாகிய லூக்கா
அழகாய் வர்ணிக்கிறார்.
இவர் பைபிள் காலேஜில்
படிக்கவில்லை.
மருத்துவம் படித்தார்.  

நாங்கள் ஜெபம்பண்ணுகிற
இடத்துக்குப் போகையில்
குறிசொல்ல ஏவுகிற
ஆவியைக்கொண்டிருந்து,
குறிசொல்லுகிறதினால்
தன் எஜமான்களுக்கு
மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின
ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்
.

ஜெபம்பண்ணப் போகையில்
சத்துரு வெள்ளம்போல் வந்தது.
கள்ளம் நிறைந்த பிசாசு
வெள்ளை மனதுடன் ஊழியம் செய்யும்
பவுலையும் சீலாவையும்
பார்த்து குறி ஏதும் சொல்லவில்லை
மாறாக உண்மையைத்தான் சொல்லியது.
பொய்யனும் பொய்க்குப் பிதாவுமான
பிசாசு சில நேரங்களில்  
உண்மையைப் பேசிவிடுவான்.


அவள் பவுலையும் எங்களையும்
பின்தொடர்ந்து வந்து:
இந்த மனுஷர் உன்னதமான
தேவனுடைய ஊழியக்காரர்,
இரட்சிப்பின் வழியை
நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று
சத்தமிட்டாள்.

எத்தனை உண்மையான
வார்த்தைகள் பார்த்தீர்களா?
உண்மையை உறக்கச் சொன்ன பிசாசு.

விசுவாசிகளாகிய நாம்தான்
உண்மையை உரக்கச்சொல்லி
உரத்த சத்தமாய் துதிக்கவேண்டும்.

ஆனால் வெளியே சத்தமாய் பேசி
சிரிக்கிற நாம் சில வேளைகளில்
சபைக்குள் வந்தவுடன்
எதோ அடக்க ஆராதனைக்கு
வந்ததுபோல
அடக்கமாய் அமர்ந்துகொள்கிறோம்.
இந்த  நிலை மாறவேண்டும்.
சத்தமாய் பாடி
சந்துருவை துரத்த வேண்டும்.


அந்த அம்மா
உண்மையைத்தான்
சொன்னாள் என்பதற்காக  
அந்த குறிகாரியை
சிஸ்டர் என்று அழைக்கமுடியுமா?

அல்லது அவளை
ஊழியத்தில் சேர்த்துக்கொள்ளமுடியுமா?

அசுத்த ஆவி பிடித்த பெண்
சரியாகச் சொன்னாலும்
அவளது வாயினால் நற்சாட்சியைப்
பெற  விரும்பாத பவுலும் சீலாவும்
அந்த இடத்தில வேத வசனத்தின்படி
பிசாசுக்கு எதிர்த்து நின்றார்கள்.

பவுல் சினங்கொண்டு
திரும்பிப்பார்த்து
நீ இவளை விட்டுப் புறப்படும்படி
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
உனக்கு கட்டளையிடுகிறேன் என்று
அந்த ஆவியுடனே  சொன்னான் .
அந்நேரமே
அது புறப்பட்டுப் போயிற்று (16:18) .

பிசாசு போகும்போது
புறப்பட்டுப் போனதாம்.

அதாவது தான் கொண்டுவந்து
அந்த அம்மாவுக்கு கொடுத்த
எல்லா சரக்குகளையும்
எடுத்துக்கொண்டு
புறப்பட்டுப் போனது. 

சபைக்கு வரும்போது
நாம்தான் புறப்பட்டு வரவேண்டும்.
ஆயத்தமாகி வரவேண்டும்.


காயீனைப் போல அப்படியே
ஓடிவந்து கத்தரிக்காயை
அள்ளிப் போட்டுவிட்டு போகக்கூடாது.

ஆபேலைப் போல மந்தைக்கு ஓடி
சிறந்ததை பிரித்து அதில்
கொழுமையான ஆட்டைக் கொண்டுவந்து
பலிசெலுத்தவேண்டும்.
அதாவது உதடுகளின்
காளையாகிய ஸ்தோத்திர பலியை
தேவனுக்கு செலுத்தவேண்டும்.

பிசாசு புறப்பட்டுப் போனான். 
இல்லையென்றால் எதையாவது
விட்டுவிட்டுப் போய்விட்டேன்
அதை எடுத்துக்கொள்ள வந்தேன்
என்று சொல்லி மீண்டும் வந்து
தொந்தரவு .பண்ணுவான்.
அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

பிசாசு புறப்பட்டுப் போனதற்கு பின்னர்
Praise the Lord சிஸ்டர் என்று  சொல்லலாம்

ஊழியத்தில் தொடர்ந்து வெற்றிகண்ட
பவுலையும் சீலாவையும் கண்டு
வெறிகொண்ட பிசாசு
உண்மையைச் சொல்லி சிக்கிக்கொண்டான்.

பெரும்பாலும்
பொய்யைச் சொல்லி
சிக்கிக்கொள்வார்கள்.
இங்கே பிசாசு உண்மையைச் சொன்னான்.

சிலர் அதை பெரிதாக
எடுத்துக்கொண்டு என்னைப் பற்றி
அப்படியே  அந்த அம்மா சொல்லிவிட்டது
என்று சொல்லி
பிசாசுக்குக் கதவைத் திறந்துவிடுவார்கள்.


பின்னர் அவன் யோவான் 10:10 ன்படி
திருடவும், கொல்லவும் அழிக்கவும்
ஆரம்பிப்பான்.
இவ்விதமாய் அவனது வலையில் சிக்கி
குறி சொல்லுகிறவர்களை நம்பி
சின்னாபின்னமானவர்கள் ஏராளம்.

அந்த அசுத்த ஆவி துரத்தப்பட்டபின்
அந்தக் குறிசொல்லும்
ஆவியையுடைய
அந்தப் பெண்மணி விடுதலையானாள்
.

குறி சொல்லும் தொழிலை
உடனே அந்த நடு ரோட்டிலேயே
விட்டுவிட்டாள்.

உண்மையான இரட்சிப்பை,
விடுதலையைப் பெற்றவர்கள்
இதுபோல தவறான தொழில் மூலம்
பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தால் 
உடனே  அதை விட்டுவிடவேண்டும்
என்பதை இந்தப் பெண்மணி மூலம்
ஆண்டவர் பேசிக்கொண்டிருக்கிறார்.  

குடி குடியைக் கெடுக்கும்,
அதே போல
குறியும் குடியைக் கெடுக்கும்.
 

குறி கேட்டுப் பழகி
குறுக்கு வழியில் சம்பாதித்த
வர்த்தகர்கள் இப்போதுதான்
முதன் முதலாக உழைத்து
முன்னேற வேண்டிய
உண்மையான நிலவரத்துக்கு
தள்ளப்பட்டார்கள்.  

இதை அவர்களால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 
இன்றைக்கும் ஓஹோ என்று
ஓடிக்கொண்டிருக்கும்
வியாபாரத்திற்குப் பின்
ஒரு  கும்பலே இருக்கும்

 உடனடி உயர்வை விரும்பினார்கள்
அதற்காக வியர்வை சிந்த விரும்பவில்லை.

குறுக்கு வழியில் சம்பாதிக்க
எவனையும் குழியில் தள்ள
அவர்கள் தயங்கவில்லை.

தனது தாரக மந்திரத்தினால்  
வர்த்தகர்களை தக்கவைத்து,
பணத்தினால் பெருக்க வைத்த
அந்தக் குறிகாரி
பவுலின்
ஊழியத்தினால் நடு ரோட்டில்
விடுதலை பெற்று
விசுவாசியாக மாறிவிட்டாள்.

தங்கள் வருமானம் போய்விட்டதே என்று
ஆத்திரமடைந்த வர்த்தகர்கள்
பவுல் மற்றும் சீலா மீது கோபம் கொண்டு
சீறிப்பாய்ந்து நடுரோட்டில்
இருவரையும் இழுத்து
வஸ்திரங்களைக் கிழித்து
பலமாய் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்காக அந்த வியாபாரிகள்
எல்லாரும் ஒருமனப்பட்டார்கள்.
எதற்காக ஒருமனப்பட்டார்கள்?
ஊழியர்களை அடித்து நொறுக்க
ஒருமனப்பட்டார்கள் .

அவர்களோடு அதிகாரிகளும்
சேர்ந்துகொண்டார்கள்.
ஊழியம் செய்து,
பிசாசு பிடியிலிருந்து ஒரு சகோதரியை
விடுதலையாக்கினதற்காக
அந்த பட்டணத்து மக்கள் செய்த
பயங்கரவாத செயலைப் பாருங்கள்.

விடுதலை பெற்றவள் எங்கே போனாள் என்று
தெரியவில்லை. 
அலங்கார வாசலில் அந்த சப்பாணி
அற்புதமாய் சுகம் பெற்றபின்
பேதுருவையும்  யோவானையும்
பற்றிக்கொண்டான்,


பிரச்சனை பெரிதானபோதிலும்
அவன் அவர்களை விட்டுப் போகவில்லை.
அதனால் அந்த எதிர்பாளர்களால்
பெரிதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை

இந்தப் பெண்மணி தனது
முன்னாள் ஆதரவாளர்களை
அடக்கியிருக்கவேண்டும்.
சரி அதை இப்போது பெரிதாக்கவேண்டாம்.

அப்போஸ்தலர் 16:19 -23 வரையுள்ள
பகுதிக்குச் சென்றால்
அந்த வன்முறையாளர்களைக் காணலாம்.
ஆம். யோர்தான் நதியளவு தண்ணீர்
ஊழியக்காரர்கள் முகத்தில் மோதிற்று.

அவர்களோ அதைக் கண்டு
பயந்தோடவில்லை.
தேவன் தமது ஊழியர்களை
நடுரோட்டில் சாகவிட்டுவிடவில்லை.

பஞ்ச காலத்தில் மட்டுமல்ல
இப்படிப்பட்ட பயங்கரவாதம்
தலைவிரித்தாடுகிற போதிலும்
கர்த்தர் தம்முடைய உண்மையான
ஊழியக்காரர்களை
உயிரோடே காக்கிறவர்
என்பது நிச்சயம். 

அந்த நள்ளிரவு
நல் இரவாக மாறியது எப்படி? 

“அவர்களை அநேக அடி அடித்த பின்பு
சிறைச்சாலையிலே வைத்து
அவர்களை பத்திரமாய் காக்கும்படி
சிறைச்சாலைக்காரனுக்குக்
கட்டளையிட்டார்கள்” (அப்.16:22)

மாலையிலே துவங்கிய வன்முறை
சிறைச்சாலை வளாகம் வரை சென்றுவிட்டது.. 
இதற்குள் முன்னிரவு முடிந்து
நள்ளிரவு வந்துவிட்டது.
பவுலும் சீலாவும் ஒருவரையொருவர்
குற்றம் சாட்டவில்லை.

அந்தப் பிசாசை ஏனப்பா துரத்தினாய்,
பேசாம இருந்திருக்கலாமே,
இப்ப பாரு, எல்லாம் உன்னால்தான் வந்தது,
யாரு எக்கேடு கெட்டப் போனா உனக்கென்ன, 
உன்னையும் என்னையும் பத்தி
உண்மையைச் சொல்லி
அந்த அம்மா விடுதலையைப் பெற்று
கம்பி நீட்டிவிட்டது.
நாமோ இப்போ
கம்பி எண்ணிக்கிட்டு இருக்கிறோம்,
இப்ப அந்த அம்மாவா வந்து
நம்மை விடுவிக்கப்போகுது?
என்றெல்லாம்
பிரதர் சீலா பவுலிடம் பேசவில்லை. 

ஒருவேளை நாமாக இருந்திருந்தால்
பவுலின் நிலைமை ரொம்பவே
மோசமாய் போயிருந்திருக்கும்.
ஒண்ணு பேசியே நோகடித்திருப்போம்
அல்லது பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பலமுறைதானே

என்றெல்லாம் பாடி சோக கீதங்களை எழுப்பி
பவுலை மயக்க நிலைக்குக் .
கொண்டுபோயிருப்போம்.

ஆனால் பவுலின் உடன் ஊழியர் சீலா
அப்படியெல்லாம் நடந்துகொள்ளவில்லை.
மாறாக நடுராத்திரியிலே
பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி,
தேவனைத் துதித்துப் பாடினார்கள்;
காவலில் வைக்கப்பட்டவர்கள்
அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் (அப்.16:25). 

ஜெபித்தார்கள்,
ஜெபித்துக்கொண்டே இருந்துவிடாமல்
துதித்தார்கள்

துதியின் சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்கள்.
துதியின் வாசனை அந்த ஆலயத்தை
இல்லை இல்லை சிறைசாலையை நிரப்பிற்று.
இருவரும் அந்த நள்ளிரவை நல் இரவாக
மாற்ற துவங்கிவிட்டார்கள்.

அல்லாமலும், உங்களில்
இரண்டுபேர் தாங்கள்
வேண்டிக்கொள்ளப்போகிற
எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும்
பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்,
பரலோகத்திலிருக்கிற
என் பிதாவினால் அது
அவர்களுக்கு உண்டாகும் என்று
உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 18:19)

இரண்டு பேர் ஒருமனப்பட்டு ஜெபித்து,
துதித்தால் அமாவாசையைக் கூட
பவுர்ணமியாக்கிவிடலாம்.
துன்பத்தை இன்பமாகிவிடலாம்.
துக்கத்தை சந்தோஷமாக்கிவிடலாம்.
நஷ்டத்தை லாபமாக மாற்றிவிடலாம்.
தோல்வியை ஜெயமாக மாற்றிவிடலாம்
.  

சிறைக்குள் தள்ளி,
உட்காவலறையில் அடைத்து
கால்களைத் தொழுமரத்தில்
கட்டிவைத்த அந்த சிறைக் காவல்
அதிகாரியும் அந்த
நள்ளிரவு துதி ஆராதனையில்
காதை மட்டும் அனுப்பிவைத்து
கலந்துகொண்டார்
.  

இன்றைக்கும் காதை மட்டும்
சபைக்கு அனுப்பிவைக்கிற கூட்டம் அதிகம்.
அவர்களின் எண்ணங்களும்
சிந்தனைகளும் ஆராதனை
முடிவதற்குள் பலமுறை
மீன் மார்கெட்டுக்குள் போய்
திரும்பிவந்துவிடும்.  

அந்த நள்ளிரவு துதி ஆராதனையில்
ஆன் லைனில் பங்கெடுத்தது போல
இருந்தாலும் அந்த ஜெயிலர்
அன்றைக்கு ஓர் அற்புதத்தை
கண்ணாற கண்டதினால்
ஆண்டவன்மாரே இரட்சிக்கப்படுவதற்கு
நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டுவிட்டார்.  

இரட்சிப்பு என்ற வார்த்தையை
எப்படி அறிந்துகொண்டாரோ?
இன்றைக்கும் 21 ம் நூற்றாண்டில்

இப்படிப்பட்ட கேள்விகளை
எழுப்புகிறவர்களை காண்பது அரிது.

நள்ளிரவோ, நடு இராத்திரியோ,
சாயங்காலமோ, அதிகாலையோ, 
நாலாம் ஜாமமோ ஒன்பதாம் மணி நேரமோ
எந்த நேரத்திலும் கர்த்தரை நோக்கி கூப்பிடலாம்.
அவர் எப்போதும் நமக்கு
செவிகொடுக்கிறவராய் இருக்கிறார்.  

தேவனுடைய சமூகம்
ஒருபோதும் பூட்டப்பட்டிருக்காது.    

நள்ளிரவு என்பது இடுக்கம் நிறைந்த
சூழ்நிலையைக் குறிக்கிறது.
துன்பமும் அதனுடைய சகோதரியாகிய
துயரமும் சேர்ந்துவந்து
சுற்றி நின்றுகொள்ளுகிற நேரமது.

சாத்தானின் தந்திரங்கள்
தாராளமாய் நடமாடுகிற நேரமது 
குறிசொல்லுவதற்கு குறிகாரர்களும்
மந்திரவாதிகளும் சுடுகாட்டில்
ஆயத்தமாகிற நேரமது. 
நள்ளிரவு என்பது ஆபத்து நிறைந்த
சமுத்திரத்தின் ஆழம் போன்றது.
நடுக்கடலில் தத்தளிப்பது போல
ஒருவரும் வந்து விடுவிக்கமுடியாத
இடமாய் இருக்கிறது.
பலர் பிசாசுகளோடு போராடி
ஜெயிக்க முடியாமல் தவறான முடிவுகளை
எடுத்து போர்வையை
கலைந்துபோடுகிற நேரமும் அதுவே.
(
2 கொரிந்தியர் 5 :4)

துன்பங்களும் உபத்திரவங்களும்
எதிர் வல்லமைகளும் கட்டவிழ்க்கப்பட்டு
நமக்கு எதிராய் வெள்ளம் போல
புறப்பட்டு வரும்போது
நாம் என்ன செய்யவேண்டும்?
என்பதை பவுலும் சீலாவும்
நமக்கு சொல்லித்தருகிற வேத பகுதி இது.

இதற்காக அவர்கள்
நடுரோட்டில் அடிக்கப்பட்டார்கள்.
அதிகாரிகளால் கிழித்தெறியப்பட்டார்கள். 
முகாந்தரமின்றி சிறையில்
அடைக்கப்பட்டார்கள். 
காரணமின்றி காயப்படுத்தப்பட்டார்கள்
கிழிந்த ஆடைகளோடு, 
இரத்தம் வடிந்துகொண்டிருந்த
சூழ்நிலையில் காயங்களோடு
ஆராதனை செய்துகொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு எந்த கண்டிஷனும் இல்லாமல்
ஏர் கண்டிஷனில் உட்கார்ந்து
விரல் நகத்தை சுத்தம் செய்து கொண்டு  
மொபைல் போனில் மெசேஜ் சாட்டிங்
பண்ணிக்கொண்டிருக்கிற
காலமாயிருக்கிறது.

உத்தமமாய் சேவிக்கிற காலேபுக்களை
காண்பது அரிதாய் இருக்கிறது.

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம் என்று
மார்தட்டிப் பேசுகிற
யோசுவாக்களை தேடித் பார்க்கவேண்டிய
சூழ்நிலை எழுந்துள்ளது. 

வெகு மனத்தாழ்மையோடும்,
மிகுந்த கண்ணீரோடும்,
யூதருடைய தீமையான யோசனைகளால்
எனக்கு நேரிட்ட சோதனைகளோடும்,
நான் கர்த்தரைச் சேவித்தேன்.
என்று சொன்ன பவுலைப் போன்றோரைப்
பார்ப்பது அரிதாய் இருக்கிறது
. (அப்.20:19)  

துன்பத்தின் பாதையில்
தூங்கிவிடவேண்டாம்,
துவண்டுவிடவும் வேண்டாம்,

ஜெபிக்கிறேன்,
ஜெபித்துக்கொண்டிருக்கிறேன் என்று
இரவை கடந்து இன்னொரு
நாளுக்குள் சென்று
காலத்தைக் கடத்தி விடவும்  வேண்டாம்.

உடனே ஜெபியுங்கள்,
உடனே துதிக்க துவங்குங்கள்.  

துதியினால் நள்ளிரவு நல் இரவாக
மாறுவது நிச்சயம்


MID NIGHT WILL CHANGE AS A
GOOD NIGHT

சடிதியிலே சிறைச்சாலையின்
அஸ்திபாரங்கள் அசையும்படியாக
பூமி மிகவும் அதிர்ந்தது;
உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது;
எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. 
பூதகரமாக வெடித்துக் கிளம்பிய பிரச்சனை
|பூமியதிர்ச்சியில்  முடிந்துபோனது.

சிறைச்சாலை ஆட்டம்கண்டது, 
கட்டுகளும் கதவுகளும் திறந்துகொண்டது.
சிறைச்சாலைக்காரனுக்கு
பேரதிர்ச்சி உண்டானது.
அதுவே இறுதியில் அவனது
இரட்சிப்புக்கு காரணமாகிவிட்டது.

அன்றைக்கு இரவு
ஞானஸ்நான ஆராதனை நடந்தது,
சிறைச்சாலைக்காரன்
அந்த நல் இரவை விடிய விடவில்லை.
விடிந்துவிட்டால் தானும் தன் வீட்டாரும்
ஞானஸ்நானம் பெறுவதற்கான
சூழ்நிலை இருக்காது.
அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.
அநீதிக்கு துணைபோகும் அதிகாரிகள்
எப்படி தேவனுடைய நீதியை
நிறைவேற்ற விடுவார்கள்?

எனவே தான் அவசர அவசரமாக
அதாவது ஞானஸ்நானம் எடுப்பதற்கு
முன் நடைபெறும் எந்த போதனை வகுப்பிலும்
கலந்துகொள்ளாமல் நேரடியாக
ஞானஸ்நானம் பெற ஆயத்தமாகிவிட்டான்.

பவுல் ஸ்தானத்தில்
இன்றைய ஊழியர்
இருந்திருந்தால்
ஞானஸ்நானத்தைத்
தள்ளிப்போட்டிருப்பார்.

நானே தன்னால
எட்டுவைக்க முடியாம இருக்கும்போது
இவனுக்கு ஞானஸ்நானமா?
அவனை நேராக சபைக்கு வரச்சொல்லு ,
உடனே ஞானஸ்னானம் கொடுக்கமுடியாது
என்று சொல்லி பிடித்த மீனை கடலில்

போட்டதுபோல் போட்டிருப்பார்

பவுல் அப்படியல்ல. 
பாடுகளில் பழக்கப்பட்ட பரிசுத்தவான்.
பிடித்த மீனை கூடைக்கு அதாவது
சபைக்கு அல்லது கர்த்தருடைய சமூகத்திற்கு
கொண்டுவந்து சேர்கிற உத்தம ஊழியன்.

வுலையும் சீலாவையும் சிறையிலிருந்து
அற்புதமாய் விடுவித்த தேவன்
துன்ப வேளையில் உறங்காமல் துதியுடன்
விழித்திருக்கும் உங்களையும் விடுவிப்பார். 

உபாதைகள் நின்றுபோகும்
புதிய பாதைகள் திறக்கப்படும்

விடுதலையும்
வெற்றியும்
விடிவதற்குள் வந்துசேரும்  

இவ்வளவும் நடந்தது சபையில் அல்ல.
சிறையில் நடந்தது. 
   

இன்றைக்கு சபை ஒருவேளை
பூட்டப்பட்டிருக்கலாம்

ஆனால் சபையின் தலைவரின்
இதயக் கதவு திறந்திருக்கிறது  

நள்ளிரவு, நல் இரவாக மாறும்

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,
மதுரை -14

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends