ஊழியம் என்பது..?

Share this page with friends

ஊழியம் என்பது

?? கர்த்தர் என் நோயை குணமாக்கினார், கர்த்தர் என் கடன் பாரத்தை மாற்றினார் என்பதற்காக பரிகாரமாக கண்டதை எல்லாம் இழுத்து போட்டு செய்வது அல்ல!

?? கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்றும், கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என்றும் எண்ணி அதற்கு கைமாறாக செய்யும் நன்றி கடனும் அல்ல!

?? கர்த்தருக்கு ஊழியம் செய்வதினால் எனக்கு கனம் புகழ், பதவி, மரியாதை கிடைக்கும் என்று கருதி செய்யும் நடிப்பும் அல்ல!

??என்னவெல்லாமோ செய்து பார்த்தேன் எல்லாவற்றிலும் தோல்வி, வேற வழியில்லை என்று வேண்டா வெறுப்புடன் செய்யும் தொழிலும் அல்ல.

??இவன் எல்லாம் வேலைக்கு ஆக மாட்டான் சும்மா அந்த பாஸ்டர் கூட போய் ஏதாவது செய்டா என்று சொல்லி செய்யும் நிற்பந்தமான ஜோலியும் இல்லை.

?? கர்த்தர் என் தேவைகள் சந்திப்பார், என் தேவைகளை கர்த்தர் சந்தித்து இருக்கிறார் எனவே அவர் நடத்துவார் என்றும் எனக்கு கூலி கிடைக்கும் என்று தேவைகள் நிறைவேற செய்யும் கூலி வேலையும் அல்ல!

?? பிறர் செய்யும் அற்புத அடையாழங்களை பார்த்து அதை போல செய்ய வேண்டும் என்கிற நப்பாசையில் செய்யும் மிமிக்கிரியும் அல்ல.

அப்படி என்றால் ஊழியம் என்பது!

1. ஆரோனை போன்று அழைப்பு பெற்றவர்களால் குறிப்பிட்ட தேவ திட்டத்தை செய்ய அதாவது அழைக்கப் பட்டதை நிறைவேற்றும் ஒரு பரிசுத்த பணியேயாகும். ஏனெனில் நம்மை அழைக்கிறவர் பரிசுத்தர்.

2. ஊழியம் என்பது அழைப்பில் பெற்றப்பணி கொஞ்சமாயினும் அதில் புகழ் கனம் வெறுத்து அந்த கொஞ்சத்த்தில் உண்மையாக இருத்தல் தான் ஊழியம்! நான் பெருக வேண்டும் என்பது அல்ல, நான் சிறுக அவர் பெருக வேண்டும் என்கிற எரிந்து பிரகாசிககும் யோவான் ஸ்னாபகனின் ஊழிய சித்தாந்தம் தான் ஊழியம்.

3. ஊழியம் என்பது எனக்கு புகழ், எனக்கு பெரிய மேடை, பதவி, எனக்கு நிறைய ஆத்துமாக்கள் வர வேண்டும், என் தரிசனம் பெரியது, என்னால் வரங்கள் செயல்பட வேண்டும் என்று நினைத்து செய்வது அல்ல. அப்படி செய்தாலே நாம் தேவத் திட்டத்தில் இருந்து விலகி நிற்கிறோம். அதினால் தான் பவுல் சரியாக கேட்கிறார் நான் என்ன செய்ய சித்தமாக இருக்கிறீர். எனவே ஊழியம் என்பது நமது ஆசை விருப்பங்களை தாண்டி கர்த்தரின் இருதய விருப்பத்தை நிறைவேற்றும் மகத்தாய பணியே இந்த ஊழியம். நாம் போடுகிற திட்டம் அல்ல அது தேவ சித்தத்தின் அடிப்படையில் செய்யும் நித்திய பணியே!

4. ஊழியம் என்பது வேலை வெட்டி இல்லாதவன் நேரப்போக்கு செய்யும் அரட்டை அல்ல மாறாக கொடுக்கப் பட்ட பணியை செய்வனே செய்ய சிலுவை சுமந்து, பாடு பட விட்டுக்கொடுக்கும், ஏன்? தங்கள் எஜமானில் அன்பு கூர்ந்து அவருக்காக அவர் கொடுத்த பணியை செய்ய மரிக்கவும் தயாராகும் தீர செயல் தான் இந்த ஊழியம்.

எனவே!..

??ஒரு பொன் அக்கினியில் சோதிக்கப் படுவது போல விசுவாசம் புடமிடப்படுவதோடு அவனவனுடையை ஊழியமும் பரிசோதிக்கப் படும்.

?? கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் நிச்சயம் வெளிப்படும்.

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends