மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை : பிரசங்க குறிப்புகள்

Share this page with friends

மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை
(ரூத் 1-4 அதிகாரங்கள்)

எலிமலேக்கு நல்ல நிறைவான வாழ்வில் பெத்லகேமில் வாழ்ந்தவன். அங்கு பஞ்சம் உண்டான நாட்களில் வாழ்ந்தவன் ஆனால் அவன் வீட்டில் பஞ்சம் இருந்ததாக வசனம் சொல்ல வில்லை ஏனெனில் அவன் குடும்பம் மற்றும் உறவினர்கள் வசதியானவர்கள் தான். நகோமி திரும்பி வந்த பிற்பாடும் அவர்கள் சொத்து அங்கே இருந்தது. உறவின் முறையான போவாஸ் செழிப்பாக தான் இருந்தான். அதினால் தான் நகோமி சொல்லும் போது நான் நிறைவாக மோவாப்புக்கு போனேன் இப்போதோ குறைவு உள்ளவளாக திரும்பி வருகிறேன் என்று சொல்கின்றதை கவனிக்கும் போது தங்களுக்கு பஞ்சம் வரக்கூடாது என்று பஞ்சம் தப்ப எலிமலேக்கின் குடும்பம் மோவாப்பை தெரிந்துக் கொண்டதை நாம் அறிய முடிகின்றது.

அதே போன்று தான் நாமும் சில அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத நாட்களில் கூட நிறைவாக சமாதானம், ஆரோக்கியம், சந்தோசம், நிம்மதி கொண்டு தான் வாழ்ந்தோம். ஆனால் சிலதை கண்டுபிடிக்க, தேட, உறவுகளை மேம்படுத்த, அறிவுகள் பெறவும், தொடர்புகளை வலுப்படுத்தி கொள்ளவும் என்று நாமும் மொபைலை தேட ஆரம்பித்தோம். அதில் மூழ்க ஆரம்பித்தோம். எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். மொபைல் இல்லாத நாட்களில் உள்ள தரிசனங்கள், தேவ பிரசன்னம், விடுதலைகள், ஊழியங்கள் இன்று குறைந்து, தரமற்ற காரியங்களை ஊழியங்கள் என்ற பெயரில் செய்து வருகின்றோம். உறவுகளை தொடர்பு கொள்கிறோம் என்று உறவுகளை இழந்து நிற்கிறோம். உறவுகளோடு நெருக்கம் இணக்கம் இன்றி பினக்குகளில் சிக்கி இருக்கின்றோம் என்பது தான் நிதர்சனம்.

இந்த பஞ்சம் வரக் காரணமே உடன்படிக்கையை மீறி, கானானில் ஆசரிப்புக்கூடாரத்தை ஸ்தாபிக்காமல் அவரவர் தன் தன் வழியில் நடந்தப்படியால் தான் என்பதை அறிய முடியும். கானனுக்குள் பிரவேசித்து எல்லாவற்றையும் பங்கிட்டு சுகபோகமாக வாழ்ந்தவர்கள் யோசுவா மரித்த பின்னர் சிலரை தங்களை விட்டு துரத்தாமல் அங்கு இருந்த அந்த ஜாதிகளில் கலந்து விட்டனர். அதில் யூதா மட்டும் முதலில் தங்கள் கானியாட்ச்சியில் இருந்த எல்லாரையும் துரத்தி கிட்டத்தட்ட எழுபது ராஜாக்களை தங்கள் வீட்டு மேசையில் இருந்து விழும் துணிக்கைகளை சாப்பிட வைத்தனர். அத்தனை தூரம் வளமாக இருந்த எருசலேமில் தான் இப்போது பஞ்சம்.

இன்றும் அறியியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் அதிகம் இல்லாத நாட்களில் இருந்த ஆவிக்குரிய நிறைவு எங்கும் இல்லை. ஆனால் வசனம் தேடுகிறோம், போடுகிறோம் என்று அன்று பஞ்சம் பிழைக்க மோவாப்பை எலிமலேக்கின் குடும்பம் தேடியது போல நாமும் மொபைலை அதை சார்ந்த உபகரணங்கள் மற்றும் நுணுக்கங்களை தேடி likes, shares, subscription க்காக எதையும் செய்து சத்திய வசனம் கிடைக்காத காலத்தில் வாழ்ந்து வருகிறோம். Like, subscription மற்றும் share எத்தனை அதிகமாக கிடைக்கும் என்கிற நோக்கத்தில் புரோகிராம் செய்கின்றோம். சத்தியம் பேச முடியாமல் நாசுக்காக பேசுகின்றோம். மீறினால் வழக்கு மற்றும் விமர்சனங்கள் வரும் என்று தவிர்த்து விடுகின்றோம்.

மோவாப்போடு சம்மந்தம் கலக்க கூடாது. அவன் தேவ சந்தியில் சேரவும் கூடாது என்று உபாகம புஸ்தகம் சொல்கின்றது. ஆனால் இந்த மோவாப்பில் எப்படி இந்த குடும்பம் ஈர்க்கப்பட்டு அங்கே எல்லாவற்றையும் இழந்தார்கள் என்று தொடர்ந்து. கவனிப்போம்.

A. எலிமலேக்கின் குடும்பம் மோவாபுக்கு போய் என்று வசனம் 1:1 இல் பார்க்கிறோம்.

அப்படி என்றால் மோவாப்பை குறித்து கேள்விப்பட்டு, அதின் மேல் கவனம் வைத்து, அதின் மேல் ஈர்ப்புக் கொண்டு, அங்கே போனார்கள் என்றே கருத வேண்டும். யார் இந்த மோவாபியர்கள் லோத்தின் மதுபான போதையில் அவன் சொந்த குமாரத்தியால் அவனுக்கு பிறந்த சந்ததி. லோத்தின் அதே ஆவி இந்த குடும்பத்தை பிடித்து விட்டது. ஒரு முறை பஞ்சம் வந்த போது எகிப்திற்கு போகாதே என்று எச்சரிப்பை கேட்ட ஈசாக்கு தன் சொந்த நாட்டில் இருந்த பொழுது நூறு மடங்கு ஆசீர்வதிக்கப் பட்டதை நாம் வாசிக்க முடியும். ஒரு போதும் பஞ்சம் பிழைக்க நாடு விட்டு நாடு போக கூடாது. அல்லது பிழைப்புக்காகவோ, எல்லாரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர் அதினால் நாங்களும் கௌரவமாக வாழ வேண்டும் என்று போக கூடாது மாறாக தேவ சித்தம் அறிந்து செல்ல வேண்டும்.

முன் நாட்களில் உள்ள பரிசுத்தவான்கள் தங்களுக்கு, தேவ சமூகத்தில் இருந்து கொண்டு பைபிள் மட்டும் கையில் வைத்துக் கொண்டு கர்த்தருடைய வார்த்தை கிடைக்கும் வரை காத்து இருந்தனர். ஆனால் இன்று பைபிள் கொண்டு கர்த்தருடைய சந்நிதியில் காத்து இருந்து பெற வேண்டிய வசனத்தை விட்டு விட்டு வசீகரமான வார்த்தைகளை பெற பைபிளுக்கு அப்பாற்பட்டு மொபைல் search கள் தான் நம் கண்களில் படுகின்றது/ சிந்தையில் வருகின்றது. உள்ளே போகின்றோம். மோவாபுக்கு உள்ளே போய் விடுகின்றோம். லோத்தின் ஆவிக்குள் நுழைந்து விடுகின்றோம். அது தான் நகோமியே இத்தனை ஆவிக்குரிய குறைவுக்கும் காரணம். கர்த்தரின் கை கடினமாக இருக்கவும் அது தான் காரணம். மனகிலேசத்திற்கும் அதுவே காரணம். எல்லா இழப்பிற்கும் அதுவே காரணம்.

B. மோவாபில் சஞ்சரித்தார்கள்

சஞ்சரித்தல் என்றால் விட்டு விட்டு தாபரித்தல் என்று அர்த்தம். கொஞ்சம் நாட்கள் எருசலேமில் கொஞ்ச நாட்கள் மோவாப்பில் வாழும் வாழ்க்கை. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால். இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்தல். போக்குவரத்துமாக இருத்தல். கொஞ்சம் ஜெபம் இடையிடையே கொஞ்சம் முக்கியமான மொபைல் அழைப்பு. கர்த்தர் என்னோடும் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிகின்றேன். கொஞ்சம் பைபிள் தியானம் அப்படியே பைபிளை திறந்து போட்டு விட்டு மோவாபுக்கு அதாவது மொபைலுக்கு போய் விடுகிறோம். கர்த்தர் சமூகத்தை அசட்டை செய்கின்றோம். ஊழியம் செய்யும் போது கூட மொபைல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. கர்த்தர் கர்த்தரின் வீடு அசட்டை செய்யப் பட்டு கனயீனம் செய்யப் படுகின்றது.

C. அங்கேயே இருந்து விட்டார்கள் (1:3)

போனவர்கள், போய் போய் வந்து சஞ்சரித்தவர்கள், இப்போது அங்கே இருந்தே விட்டார்கள். மொபைலே sorry மோவாப்பே கதி என்று இருந்தே விட்டார்கள். அதினால் இழந்தது என்ன? கணவனை இழந்து விட்டார்கள். பிள்ளைகள் தகப்பனை இழந்து விட்டார்கள். இன்றும் அது தானே நடக்கிறது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் போதோ சுதாரித்துக் கொள்ள வில்லை எனில் இழப்பு இன்னும் அதிகமாகும். மொபைல் ஊழியத்தில் அதிகக் likes கிடைக்கிறது அதிக subcribtion கிடைக்கிறது என்று அதிலே தங்கி இருக்கிற நண்பரே நீங்கள் உங்களை அறியாமல் இழந்து இருப்பதை கவனித்து பாருங்கள். கணவன் இறந்தால் என்ன? இரண்டு ஆண் மக்கள் இருக்கிறார்களே என்று சம்மந்தம் கலக்க கூடாத இடத்தில் இந்த நகோமி கலந்து பிள்ளைகளுக்கு திருமணமும் செய்து விட்டாள். உறவு அந்நிய தேசத்தில் பினைப்பாக மாறியது. மொபைல் பிணைப்பாக மாறி விட்டது. விட முடிய வில்லை. அதிலே இருந்து விட்டோம்.

D. அங்கேயே ஏறக்குறைய பத்து வருடம் வாசம் பண்ணினார்கள். (1:10)

இப்போது இன்னும் ஆழமாக சென்று விட்டார்கள். Search search என்றே மூழ்கி விட்டார்கள். கல்யானம் கொண்டாட்டம் என்றும் ஆட்டம் பாட்டம் அய்யோ அய்யோ எப்படி எல்லாம் இந்த மொபைல் sorry இந்த மோவாப் மக்கள் திருமண கொண்டாட்டங்கள் செய்கின்றனர். 1000 likes, 1000 subcribtion க்கு மேலே கிடைக்கிறது என்று சந்தோஷப் பட்டுக் கொண்டே இருக்கும் பொழுது நகோமிக்கு கிடைத்த செய்தி இரண்டு பிள்ளைகளும் மரித்துப் போனார்கள் என்பதே. இன்று ஆவிக்குரிய ரீதியில் உறவுகள் ரீதியில் குடும்பத்தையும் பிள்ளைகளையும் இழந்து நிற்கிறோம் என்றால் கர்த்தரை விட்டு, அவர் சமூகத்தை விட்டு ஏதோ ஒரு இடத்தில் அதீத வாசம் செய்துக் கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். சுதாரித்துக் கொள்வோம்.

இவைகளால் நகோமி அடைந்தது என்ன?

நகோமி என்றால் இன்பமானவள் என்று பொருள். ஆனால் அவள் நிலை என்ன?

  1. தனித்தவளானாள்
  2. வாழ்க்கயற்றவளானாள்
  3. கர்த்தருடைய கை விரோதமாக மாறிற்று அதினால் மிகுந்த விசனம் உண்டானது
  4. மாராள் என்கிற கசப்பில் வீழ்ந்தாள்
  5. நிறைவு குறைவாக மாறியது
  6. சிறுமைப் படுத்தப்பட்டாள்
  7. கிலேசத்தால் நிறைந்தாள்

இன்று இந்த நாகரீக வாழ்வில், தொழில்நுட்பம் நிறைந்த வாழ்வில் தான் அதீத தனிமை, மனக் கலக்கம், மனச்சோர்வு, கிலேசம், குறைவான நிம்மதி, விசனம், கசப்பு போன்ற வாழ்க்கையற்ற நிலை போன்றவை இருக்கின்றது.

இவைகளில் இருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்?

A. மோவாப்பை/ mobile ஐ விட்டு எழுந்து வெளியே வந்து பெத்லகேம் நோக்கி நடக்க வேண்டும்.

தொழிலினுட்பங்களை தாண்டி, அவைகளை மூழ்கி கொண்டு இருக்காமல், அவைகளின் சந்தோசத்தை குறைத்துக் கொண்டு, மொபைல் ஐ ஆஃப் செய்து வைத்து விட்டு தேவ சமூகம் நோக்கி நடப்போம். இந்த உலக மோபாபிய அனுபத்தில் இருந்து கிடைத்த ரூத் என்னும் பாடத்தை கைகளில் பிடித்துக் கொண்டு தைரியமாக கிருபாசனம் சேர்வோம். உலக பொருட்கள் ஒருபோதும் நமது தனிமை பஞ்சத்தை போக்காது. இன்று அறிவியல், தொழில் நுட்பம் போன்ற வளர்ச்சியற்ற நாடுகளில் தான் எழுப்புதல் உண்டாகிறது. தேவ வார்த்தைகளை தேவைக்கு ஏற்றப்படி கிழித்து மறைத்து வைத்துப் படுகின்ற சீனா வட கொரியா போன்ற நாடுகளில் தான் எழுப்புதல் பெருகி வருகின்றது. வேத வசனத்தை தைரியமாக கையில் எடுத்துக் கொண்டு கர்த்தர் சமூகம் சேர்வோம். அவர் சர்வ வல்லவர் தான் ஆனால் இரக்கமுள்ள தேவன். எழும்பி பிரகாசிப்போம். தூசியை உதறி தளளிவிட்டு, மனம் திரும்பி, பாரமானயாவற்றையும் தள்ளி விட்டு கிறிஸ்துவை நோக்கி ஓடுவோம்.

B. ரூத்தைப் போன்று மன உறுதி உள்ளவர்களாக மாறுவோம்.

கர்த்தரோடும் ஜனங்களோடும் நேரத்தை செலவிடுவோம். கர்த்தருடைய ஜனங்கள், கர்த்தருடைய தேசமாகிய பரலோக ராஜியம், கர்த்தர் என்கிற கோணத்தில் உறுதியாக இருப்போம். மோவாபுக்கு திரும்பி போகிறதை குறித்து பேச வேண்டாம் என்கிற உறுதியில் வருவோம். இவுலக வாழ்வை வெறுப்போம். சுய தேசம் மறப்போம். தேவ ராஜியம் காண விசுவாசித்து நகோமி கூட போக தீர்மானிப்போம். நமது நகோமியை கண்டுபிடிப்போம். நகோமி கற்பித்தப்படி ரூத் செய்தது போல பரிசுத்தவான்கள் உபதேசத்தில் ஜெபத்தில் உறுதியாக இருப்போம்.

C. போவாசைப் போன்று பிறரது நற்கிரியைகளை அப்படிப்பட்டவர்களை அங்கீகரித்து, ஆதரவு கொடுத்து, நல் வார்த்தை பேசி, சிலரையாவது அக்கினியில் இருந்து விடுதலை ஆக்கி நாமும் சுதந்திரவாளியாக மாறுவோம்

ஜனத்தை நேரடியாக விசாரித்து, தானியம் கொடுப்போம். தானியங்களை நேரடியாக சிதறி சென்று சிதறிடிப்போம். தனித்தாள் நேரடி சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தம் ஆவோம். மொபைல் வழி சுவிசேஷத்தை விட நேரடி சுவிசேசத்திற்கு முன்னிரிமை கொடுப்போம். இந்த உலக சுதந்திரவாளிகள் கையில் இருந்து ஜனத்தை மீட்டேடுப்போம்.

D. நகோமியின் ஆசீர்வாதத்தில் பங்கெடுத்து புதிய வரவின் நிமித்தம் வாழ்த்துவோம்.

பிறருக்கு சமாதான, சந்தோச வாழ்த்துதல் சொல்லும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அவர்களையும் கிறிஸ்துவின் வழியில் கொண்டு வந்த சர்வவல்லவரை வாழ்த்துவோம். கசப்புகளை வாழ்த்தாக மாற்றுவோம். உண்மையாக மனம் திரும்பி வரும் புதிய சகோதர சகோதரிகளை வாழ்த்துவோம். மூத்த குமாரனின் ஆவியை விட்டு விட்டு நகோமியோடு அவர்கள் சந்தோசத்தில் களி கூறுவோம். ஏனெனில் ஒரு பாவி கர்த்தரிடம் திரும்பி வந்தால் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டு என்பதை அறிந்து வாழ்த்துவோம்.

கர்த்தர் துரத்துண்டவர்களை சேர்த்துக் கொள்ள சீக்கிரம் வருகின்றார். நமது சந்தோசம் நிறைவாக அவர் வருகின்றார். பூமியை நியாயம் தீர்க்க வருகின்றார். அவரது வழிகளில் அநேக ரூத்துக்களை சேர்த்து அவரது உலகளாவிய திட்டத்தை நிறைவேற்றுவோம். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

செலின்


Share this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662