home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home

ஒட்டும் உறவும்

Share this page with friends

ஒட்டும் உறவும் ஓரங்கப்பட்டு, பட்டும் படாமல் உறவுகளை பகிர்ந்துகொள்ளும் காலம் இது. வேர் விட்ட, விழுது விட்ட அன்பு என்றெல்லாம் பழகிய காலம் பழங்காலம். என்ன என்றால், என்ன. . ம் ம் …. என்றால் இம்ம்…. அவ்வளவுதான். இதுவும் எவ்வளவு காலம் நீடிக்கும்?

பணம், பதவி, பட்டம், அந்தஸ்து என்று அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான். அதுகூட இப்போது கழன்று, கட்டுவிட்டு வருகிறது. அது தெரியாமல் இன்னும் சிலர் பரிதாபமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஊர் சுற்றுபவர்கள், உலகம் கடந்து வாழ்பவர்கள் எல்லாம் இதில் அடக்கம்.

சிலருக்கு அருகில் உள்ள உறவுகள் பிடிக்காது. அகிலம் கடந்த மரபுகள் பிடிக்கும். இவர்களெல்லாம் வேலிதாண்டிய வெள்ளாடுகள். இவர்களையெல்லாம் கூட்டி கட்டி வைத்தாலும் வெட்டிக்கொண்டு போய்விடுவார்கள். உறவுகளிலும் இப்போது கவனம் தேவை. “சட்டி சுட்டதடா கை விட்டதடா’’ என்று அன்றும் பாடினார்கள், இன்றும் பாடுகிறார்கள். நமது ஆண்டவர் உறவுகளைப் பேணி வளர்க்க விரும்புகிறவர். உலகில் மாம்சத்தில் வெளிப்பட்ட நாட்களிலும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தம் தாயாரோடும் குடும்பத்தோடும் தம் சகோதரரோடும் இருந்தவர் என்று நாம் அறிவோம். ஆவிக்குரிய வாழ்விலும் அவர் நம்மைவிட்டுப் பிரியவில்லை. அவர்தாமே தம் சொந்த ஜனங்களுக்கென்றும், தம் சொந்த ஜனங்களுக்காகவும் வந்தார், வளர்ந்தார். ஊழியம் செய்தார்.

இப்போது சபைகளைக் கூறுபோடும் ஊழியர்களிடம் சிக்குண்டு, எத்தனை நல்ல ஆத்துமாக்கள் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் சிக்குண்டு சிதறிப்போகின்றனர். மனிதரின் பண்பாடும் அதற்கு இடம் கொடுக்கிறது. கிறிஸ்துவின் பண்பாடு அதற்கு இடம் கொடுப்பதில்லை. எப்போதும் கிறிஸ்துவுக்குள் ஒருமித்து வாழ்வதே அவரின் கோட்பாடாகும்.

சீஷர்களின் மனநிலை வித்தியாசமாக காணப்பட்டாலும் அத்தனை சீஷர்களையும் கடைசிவரை அவர் தம்மோடேயே வைத்திருந்தார்.
நாமாக இருந்தால் யூதாஸ்காரியோத்தை, இரண்டாம் ஆண்டிலேயே கழற்றிவிட்டிருப்போம். ஆண்டவர் சிலுவையின் மரணபரியந்தம் அவனை மூன்றரை ஆண்டுகளும் கழற்றிவிடவில்லை. இதுதான் வெற்றி வாழ்க்கை.

இப்போது அப்படியா இருக்கிறது? மூன்று ஆண்டில் முப்பது பிரிவாகவல்லவா உடைகிறார்கள். தேவ ஜனங்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதெல்லாம் பேச்சுக்களுக்கும், கட்டுரைகளுக்கும், எடுத்துக்காட்டும் சொல்லாகத்தான் இப்போது பயன்படுகிறது.

இயேசு தம் ஜனங்களைக் குறித்துச் சொல்லும்போது ‘’இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேன் என்றும் மற்றபடியல்ல’’ என்றும், “இது பிள்ளைகளின் அப்பம்’’ என்றும் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரே! (மத்தேயு 15:24).

தம் பணப் பெருமையினாலும் , அதிகார அந்தஸ்தினாலும் தம் சொந்தங்களை பிரித்துப் பேசும் பரிசுத்தவான்கள் எத்தனைபேர் இன்று இருக்கிறார்கள்!

ஆவிக்குரிய அந்தஸ்து தனக்கு கிடைத்துவிட்டால், அதிலும் ஒரு வளர்ந்துவருகிற சபையைப் பொறுப்பெடுத்துப் போதகராகிவிட்டால், அயல்நாட்டில் காலடி எடுத்து வைத்துவிட்டால் அடுத்தவர்களை அற்பமாய் நினைக்கும் அதி நவீன ஊழியர்கள் அதிகரித்துவிட்ட காலம் இது! இது ஆகாரின் சு(பாவம்). சாராளை அற்பமாக எண்ணினாளே!

தரிகெட்டுப்போனாலும் ஆண்டவர் தம் ஜனங்களை, என் ஜனங்கள், என் ஜனங்கள் என்றுதானே சொல்லுகிறார். பாவத்தை வெறுத்து, பாவிகளை நேசிக்கும் தேவன் நம் தேவன். நீதிமான்களையல்ல பாவிகளையே இரட்சிக்க வந்தவர் நம் தேவன்.

ஒட்டு மரக்கன்றுகளை விரும்பும் விவசாயிகள் அநேகர் உண்டு. மரங்களின் சுபாவங்களை மாறச்செய்யும் முயற்சிகள். ஒருவேளை பலன் தரலாம். ஆனால், அவை நீடித்திருப்பதுமில்லை, நீண்டகாலம் கனி தருவதுமில்லை. வேர் முதல் மரத்தின் கிளை நுனிவரை ஒரே சுபாவம் தேவை. மரங்களின் கனிகளில், சுவையில் முதிர்ச்சி தேவை.

தேவ ஜனம் வளர்ச்சியிலும், முதிர்ச்சியிலும் தெய்வீக சுபாவமும், உறவின் பரிசுத்தப் பாங்கும் வளர்ச்சி பெறுதல் அவசியம்.

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
அவர்கள் ஓட்டுமரக் கன்றுகள் அல்ல. ஓங்கி வளருகின்ற விருட்சக்கன்றுகள்.

கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறவன் நீ.

நல்ல கனிகொடுக்கும் மரங்களாக தேவ சமூகத்தில் காணப்படுகிறோமா? இதுவே தேவன் எதிர்பார்க்கும் உறவு.

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்

தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்


Share this page with friends