உடும்புப்பிடி விசுவாசம்

Share this page with friends

சூனேமியாள் எலிசா தீர்க்கதரிசியைச் சந்திக்கிறாள்

உடும்பு(Monitor lizard) என்பது
பல்லி வகையைச்
சேர்ந்த பேரினம் ஆகும்.

பெரிய ஊர்வன உயிரினம்,
எனினும் 20 சென்டிமீட்டரளவில்
நீளம் கொண்டுள்ள
இனங்களும் உண்டு

இவை நீண்ட கழுத்து,
வலுமிக்க வால் மற்றும்
நகங்கள் மேலும்
நன்கு வளர்ந்த மூட்டுகள்
ஆகியவற்றைக் கொண்டுள்ளன

இது ஒன்றைப் பிடித்துவிட்டால்
விடவே விடாது.
உறுதியான
பிடிப்புள்ளவர்களுக்கு
அடைமொழியாக இது பயன்படுகிறது.

சூனேமியாளின் விசுவாசமும்
அப்படித்தான்.

தன் விசுவாசத்தில்
உறுதிகொண்ட பெண்மணி
புருஷனோ உலகத்தின் புதுமைகளோ
அவளது விசுவாசத்தை
அசைக்க முடியவில்லை.

இவள் நகோமியின் மருமகளான
ரூத்துக்குச் சொந்தக்காரியாய்
இருப்பாளோ?

ஜெப வீரனான
தானியேலின் தாயாய்
இருப்பாளோ?

சாவை சட்டைபண்ணாத
சாத்ராக்கின்
சகோதரியாய் இருப்பாளோ?

அக்கினிச் சூளையை
நீச்சல் குளம் போல
எண்ணி உலாவின
ஆபேத் நேகோவின்
அக்காவாய் இருப்பாளோ?
என்றெல்லாம் சூனேமியாளை
நினைக்கத் தோன்றுகிறது!

ஆம், அவள் ஒரு
விசுவாச வீராங்கனை!


சபைகள் இல்லாத,
போதனை இல்லாத காலத்தில்,
சத்தியத்திற்கு உட்பட்டு
ஜீவனம்பண்ணிய
சத்திய பெண்மணி!

பணத்திற்கும் பகட்டிற்கும்
அடிபணியாத,
சாவை வென்ற எலிசா!
சூனேம் என்ற ஊருக்கு
வரும்போதெல்லாம்
சூனேமியாளின் வீட்டில்
தங்கிச் செல்வது வழக்கம்
(2 இராஜாக்கள் 4:8)

அவர் ஒரு பரிசுத்தவான்
என்று தன் புருஷனிடத்தில்
சூனேமியாள் சொல்லி மகிழ்வாள்

நாம் மெத்தையின் மேல்
ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி…

(2 இராஜாக்கள் 4:10)
இந்த உரையாடலில் தன்
கணவனைக் கனம்பண்ணி
செயல்படுகிறதை காணமுடிகிறது.

ஆஸ்திகளால் ஊழியம் செய்த
சகோதரியான சூசன்னாளைப்
போன்றவள்
(லூக்கா 8:3).

இவளது கணவர்
நல்ல உள்ளம் படைத்தவர்.

மதிகெட்டவளே,
பயித்தியக்காரி போல
பணத்தை ஏன் இப்படி
விரயம்பண்ணுகிறாய்?
அந்தப் பணத்தை வைத்து
ஒரு வீட்டைக் கட்டி
வாடகைக்கு விடலாமே என்று
சொல்லாதவர்.

பரிசுத்தவானுக்கு
இவர்கள் இருவரும்
ஒருமனப்பட்டு
சிறிய அறைவீட்டைக்
கட்டுகிறார்கள்.

விசுவாசிகள் எனும்
கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே
அவர் நடுவில் உண்டு
ஒருமனம் ஒற்றுமை
அங்கு உண்டு
என்று சொல்லும்
நாட்கள் இன்று வேண்டும்

திறவுண்ட வாசல்
அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய்
முன் செல்வார் யார் ?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

நொறுங்குண்ட மனதாய்
முன்செல்வோர் யார்?
என்று பாடி முடித்துவிட்டு,

திறவுண்ட அந்த ஆலயத்தின்
கதவுகள் அடைக்கப்படுவதற்கு முன்
,

எத்தனை வேற்றுமைகள்?
பாரபட்சமான செயல்பாடுகள்,
ஜாதிச் சண்டைகள்,
நாற்காலிச் சண்டைகள்,
அதிகாரப் பேச்சுக்கள்,
பணத்தால் மற்றும் இனத்தால்
அரசியல் கட்சிகள் போல
தனித்தனிப் பிரிவுகள்
?

இத்தனைக்கும் நடுவே
பாடலை மட்டும்
ஒரே குரலில்
இனிமையான இசையுடன்
கொயர் மாஸ்டர் உதவியுடன்

பாடி முடிப்பார்கள்.

சூனேமியாளுக்கும்
அவளது கணவனுக்கும்
இடையே காணப்பட்ட ஒருமனம்
நூறு பேரிடம் காணமுடிவதில்லை
.

ஆட்கள் அதிகரிக்கும்போது
ஆஸ்தி பெருகும்போது
ஒருமனம் குறைகிறது,

ஒப்புவித்தேன் என்னையே”
என்று பலமுறை பாடியும்
ஒருமுறைகூட உருப்படியாய்
ஒப்புக்கொடுக்காதவர்கள்

எத்தனைபேர்?

ஆனால் சூனேமியாளும்
அவளது கணவரும்
ஒருமனதுடன்

செயல்பட்டார்கள்.

ஆக்கில்லா பிரிசில்லா போல,
குழந்தை இல்லை
என்ற போதிலும்,
குழந்தை மனதுடன் எலிசாவுக்கு
உறுதுணையாய் நின்றவர்கள்.

முதுமையிலும் புதுமை கண்ட
சகரியா எலிசபெத் போல

என்று சொன்னால் மிகையாகாது.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends