நன்னெறி

வியாதியஸ்தர்களை
1) விசாரிக்க வேண்டும் (மத் 25:36) வியாதிபட்டவர்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டும் (or) போன் மூலமாக விசாரிக்க வேண்டும்.
2) ஆறுதலான வார்த்தைகள் அவர்களுக்கு சொல்ல வேண்டும் (2 இரா 8:14) சீக்கிரம் குணமாகி விடும், தைரியமாக இருங்கள், நாங்கள் ஜெபிக்கிறோம், தேவனாலே கூடாதது ஒன்றுமில்லை என்று வியாதியஸ்தர்களுக்கு ஆறுதலான, அவர்கள் துக்கத்தை மாற்றும், அவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை கூற வேண்டும். சில டாக்டர் இடம் சென்றால் அவர்கள் பேசும் அன்பான பேச்சால் நோய் பாதி குணமாகி விடும்.
3) அவிசுவாசமுள்ள வார்த்தைகள் நோயாளிகள் இடம் பேச கூடாது (சங் 41:8)= சிலர் வியாதி உள்ளவர்களிடம் எனது நண்பர் இதே வியாதியால் கஷ்டபட்டார் , கடந்த வாரம் மரித்து போனார் என்று புத்தியினமான வார்த்தைகள், தேவையற்றதை பேசுவார்கள்.
4) ஜெபிக்க வேண்டும், பொருள் உதவி செய்ய வேண்டும் (எபி 13:3) ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் (யாக் 5:16). யோபு தன் சிநேகிதர்க்காக ஜெபித்தான் யோபு (42:10) நன்மை செய்யும்படி உனக்கு திராணி இருக்கும் போது அதை செய்ய தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே (நீதி 3:27). நல்ல சமாரியன் காயப்பட்டவனுக்கு உதவி செய்ததை லூக் 10:30-34 ல் வாசிக்கிறோம்