என் மகளே உன் செய்தி என்ன?… வித்யா’வின் விண் செய்தி!

மாமியார் மருமகளைப் பார்த்து
என் மருமகளே என்று அல்ல,
என் மகளே உன் செய்தி என்ன?
என்று கேட்டாள்!
யோவான் 3:16 என்றால் நன்றாய் தெரியும்
ரூத் 3:16 என்றால் தெரியுமா?
இன்னும் சிலர் ரூத் 3 -ம் அதிகாரம்
என்று போதகர் சொன்னவுடன்
ரூத்-தைத் தேடுவார்கள்!
நீதியின் வசனத்தில்
பழக்கம் உள்ளவர்களுக்கு
ரூத்’ புஸ்தகம் எங்கே இருக்கிறது
என்று அத்துப்படியாகத் தெரியும்
ரூத், ஒரு செய்தியை மாமிக்கு
சொல்லுகிறாள் – ரூத் 3:17 -ஐ
கொஞ்சம் எட்டிப்பாருங்கள்
அப்படி போவாஸ்
என்னதான் செய்தி சொன்னார்?
”போவாஸ், போ
என்றுமட்டும் சொல்லவில்லை”
ஆறுபடி வாற்கோதுமையைக்
கொண்டுபோ என்றார்
யாருக்கு?
மாமியாருக்கு!
நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்
போகவேண்டாம் என்று சொல்லி,
இந்த ஆறுபடி வாற்கோதுமையை
எனக்குக் கொடுத்தார் ..
இதுதான் ரூத்
கொண்டுவந்த செய்தி!
மாமியாரண்டைக்கே
வெறுமையாய்
போகவேண்டாம் என்றால்!!!
கர்த்தருடைய சந்நிதிக்கு
வெறுங்கையோடு போகலாமா?
என்று கேட்கிறேன்.
வெறுங்கையோடே என் சந்நிதியில்
ஒருவனும் வரக் கூடாது
(யாத்திராகமம் 34:20)
இது நீதி தேவனின் கட்டளை!
உங்கள் செய்தி என்ன?
கொரோனாவைப் பற்றியா?
கொள்ளை நோயைப் பற்றியா?
நற்செய்தியைப் பற்றியா?
துர்செய்தியைப் பற்றியா?
நற்செய்தியைச் சொல்லுவோம்
நாதன் இயேசுவை நடுவானில்
சந்திக்க ஆயத்தமாவோம்

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை