- 29
- 20250402

மியான்மார் நிலநடுக்கம் 1000க்கும் மேல் பலி இந்தியாவும் காரணம் என அறிக்கை
- Myanmar
- 20250328
- 0
- 90
மியான்மர்: மியான்மரில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மியான்மர் உருக்குலைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும், இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள மியான்மரில் நேற்று பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் குலுங்கியது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
பலி எண்ணிக்கை 1,000
அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. கடுமையான இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்தது. அண்டை நாடான தாய்லாந்தும் தப்பவில்லை. தாய்லாந்து தலைநகர் பாங்காக் பகுதியில் வானுயர்ந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். அதே கட்டிடத்தில் பணியில் இருந்த 90 பேர் மாயமானார்கள். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்தினால் கடிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுளின் விவரம் வருமாறு:-
மியான்மர் நாடு இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையே உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்டுகளுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இதனால், இந்த நாடு நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறது. இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்கள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் நேற்றைய தினம் ஏற்பட்ட அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரனமாக சொல்லப்படுகிறது.
மியான்மரில் தொடர்ந்து நடக்கும் மீட்பு பணிமியான்மருக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவும் மியான்மருக்கு உதவ முன்வந்துள்ளது. ஆபரேஷன் பர்மா என்ற பெயரில் மியான்மருக்கான உதவி நிவாரண பணிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. மியான்மருக்கு முதன் முதலில் ஆதரவுக்கரம் நீட்டிய நாடு இந்தியாதான் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் குழுவினர் போர் விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளது.
சீனாவும், ரஷ்யாவும் மியான்மருக்கு மீட்புக் குழுவினரையும் உதவிகளையும் அளித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அளித்து வந்த நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ள போதிலும், மியான்மர் பாதிப்புக்கு உதவிகள் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்
நாம் வாழும் இந்த பூமியானது மூன்று முக்கிய அடுக்குகளை கொண்டது. மேலோடு, மேன்டில், மற்றும் கோர் என மூன்று அடுக்குகள் உள்ளன. மேலோடு பூமியின் வெளிப்புறப் பகுதி, மேன்டில் நடுப்பகுதி, மற்றும் கோர் பூமியின் மையப் பகுதியாக உள்ளது. மேலோடு எனப்படும் பூமியின் மேற்பரப்பு பல பெரிய தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் நகரும்போது ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, பாறைகள் உடைந்து ஆற்றல் வெளியிடுகிறது. இவை நிலநடுக்கங்களை உருவாக்குகிறது.
Myanmar earthquake