உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

Share this page with friends

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் தலைமையில் கொண்டாப்பட்டது.

காலை 10 மணிக்கு வண்ணாரல்பேட்டை சிமிர்னா AG சபையில் சிறப்பு ஆராதனை போதகர் ஜோயல் நடத்தினார்.

பிற்பகல் 12 மணி அளவில் பாளை குளோரிந்தா ஆலயத்தில் வைத்து ஆதரவற்றோர் 100 பேருக்கு மதிய உணவை உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ. ஜெபசிங் வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் போதகர் வேதக்கண் செய்திருந்தார்.


Share this page with friends