Today I am going to send you a Jew

கழுத்து! வித்யா’வின் (விண்) பார்வை

Share this page with friends


கழுத்து என்பது சரீரத்தையும்
தலையையும்
சரியாக இணைக்கும் ஓர்
இணைப்புப் பாலம் போன்றது.

மூளைக்கும் உடலிற்கும்
இடையேயான பரிமாற்றங்கள்
இதன் வழியே நடைபெறுகின்றன.

பாலம் பழுதடைந்தால் வாழ்க்கைப்
பயணம் பாதிப்படையும்.
ஆயுள் சக்கரம் ஆட்டம் காணும்

தலை என்பது ஓர்
தலைமைச் செயலகம்
போன்றது

இந்தக் கழுத்தை உடையவர்கள்
அதைக் கடினப்படுத்துவதும்
அதைக்கொண்டு கர்த்தரை
கனப்படுத்துவதும் அவரவர்
மனதைப் பொறுத்திருக்கிறது.

இன்றைய நிலையைப்
பார்த்தால்,
நிணந்துன்னிக் கொழுத்து
(சங்கீதம் 17:10,)
நித்தியத்தை மறந்து
சத்தியத்தைத் துறந்து
கட்டுக்கதைகளுக்கும்
(2 தீமோத்தேயு 4:4)
காட்டுக்கழுதைகளுக்கும்
கழுத்தைச் சாய்த்து
வணங்கா கழுத்துள்ள ஜனங்கள்
என்ற பட்டியலில் இடம்பிடித்து
கடினப்படுத்திக்
கொள்கிறவர்களே
களத்தை
நிரப்பியிருக்கிறார்கள்.

கழுத்தைக் கடினப்படுத்தி
கர்த்தரைக் கனவீனம்பண்ணி
அற்புதரை மறந்து
அடிமைத்தனத்திற்குள் நுழைந்து
அவர்கள் கண்டதென்ன?
பெற்றது யாது?

இஸ்ரவேலிலிருந்த
அனைவரின் தலைகளை விட
உயரத்தில் உயர்ந்தவன்
அனைத்து இஸ்ரவேலருமே
இவனது தோளுக்குக்
கீழானவர்கள்
என்ற பெருமைக்குரியவன்

கீஸ் என்பவனின்
குமாரனான சவுல்,
காணாமல் போன தன்
தகப்பனின் கழுதைகளைத்
தேடிச்சென்றபோது,
சாமுவேலைக் கண்டான்

நீ தான் இஸ்ரவேலின்
முதல் ராஜா என்று
அவர் சொன்னபோது
(1 சாமுவேல் 9:21)
தரைமட்டும் தன்னைத்
தாழ்த்தினான்.

ராஜாவானபின்
தாழ்மையை
தரையிலே தள்ளிவிட்டு
தனக்கொரு ஜெய ஸ்தம்பத்தை
நட்டுவைத்தான்


அதோடு எட்டுவைத்து
ஏறிச்சென்று
தாவீதைத்
தொலைத்துக்கட்ட
தீவிரமாய் செயல்பட்டான்.

ஈட்டியை வைத்துக்கொண்டு
போட்டியைத் துவக்கியவன்
31-ல் முடிந்துபோனான்

என்ன?
ஒருமாதிரியாய்
பார்க்கிறீர்கள்?

1 சாமுவேல் 31:13-ல்
அந்த அதிகாரமும்
அவனது சர்வ அதிகாரமும்
அடக்கத்தில்தானே முடிந்தது.

தலைமைப் பொறுப்பில்
தன்னிகரற்ற தலைவனாய்
இஸ்ரவேல் தேசத்தில்
எல்லாருடைய தலைகளைவிட
உயர்ந்தவனாயிருந்தும்

தலைசிறந்தவர் என்று
சொல்வதற்கில்லை


தலை மட்டும் உயர்ந்தவன்
என்று வேண்டுமானால்
சொல்லலாம்.

அவனது துவக்கம்
அற்பமாயிருந்தது உண்மைதான்
முடிவு அகோரமாய்
இருந்ததையும் கவனிக்கவேண்டும்.

மலைமேல் உள்ள
பட்டணம்போலிருக்கவேண்டியவன்
கில்போவா மலையில்
தலைவேறு, உடல்வேறு என்று
வேறுபிரிக்கப்பட்டுக் கிடந்தான்.

நீங்கள் எனக்கேற்ற
பரிசுத்தவான்களாய்
இருப்பீர்களாக
நீங்கள்
என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு
உங்களை
மற்ற ஜனங்களைவிட்டுப்
பிரித்தெடுத்தேன் (லேவி 20:26)
என்ற எச்சரிப்பு
சவுலுக்கு
நச்சரிப்பு போல இருந்திருக்கும்.

இதனால் சிங்காசனத்தில்
இடம் தந்த  தேவன்
பிதாக்களின் கல்லறையில்
இடம் தரவில்லை

சவுலின் உடல்
புதைக்கப்படவுமில்லை
விதைக்கப்படவுமில்லை

மாறாக தகனம் செய்யப்பட்டது

சவுலின் தலையும்
ஆகாமல்போன அவனது
ஆயுதங்களும்

பெலிஸ்தர் தேசத்திலே
ஊர் சனம் பார்க்க
உலா வந்தது.

இறுதி ஊர்வலம் முடிந்தது
எலும்புகள் எடுத்துவரப்பட்டு
யாபேஸின் தோப்பிலே
அடக்கம்செய்யப்பட்டது
அங்கே ஏழு நாட்கள்
உபவாசித்தார்களாம்?

உபவாசிக்க வேண்டியவன்
உபவாசத்தை மறந்து போனான்


கர்த்தருக்கென்று
வேறுபிரிக்கப்பட்டதை
நினைத்து
கர்த்தருக்குள் காத்திருந்து
ஆக்கில்லாள்
பிரிஸ்கில்லாள் போல

கர்த்தருக்கும் அவரது
பரிசுத்த ஊழியருக்கும்
கழுத்தைக் கொடாமல்
போனதினால் (ரோமர் 16:4)

எவனோ ஒருத்தன்
ஏழு நாட்கள்
உபவாசிக்கிறான்!

(1 சாமுவேல் 31:13)

இது சிந்திக்கும் காலம்
செயல்படும் நேரம்

கிருபையாய் கிடைத்த
இந்த வருடமானது  
எதிர்வரும்
டிசம்பர் 31-ல் முடியப்போகிறது.


காலண்டர் வேண்டுமானால்
காலாவதியாகலாம்
 
நீங்களும் நானும்
அழைத்தவரின் கரங்களை
பிடித்துக்கொண்டு

கலப்பையில் கையை
வைத்துக்கொண்டு


விசுவாசத்தைத் துவக்குகிறவரும்
முடிக்கிறவருமாயிருக்கிற
இயேசுவை நோக்கி,
நமக்கு நியமித்திருக்கிற
ஓட்டத்தில் பொறுமையோடே
ஓடக்கடவோம்.

(எபிரெயர் 12 :1)

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,
மதுரை 14


Share this page with friends