
திருப்பூர் மாவட்டம் , அவினாசி அருகில் கருவலூரில் தனது வீட்டில் சபை நடத்திவந்த திரு. பிரான்சிஸ் என்பவரை அந்த இடத்தில் சபை நடத்தக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்றும்,குறிப்பிட்ட மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தடுத்தும்,இடையூறும் செய்து வந்தனர். இது குறித்து காவல்துறை ,வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்ததின் பேரில் ,காவல்துறையும் வருவாய்த்துறையும் மேற்படி இடத்தில் ஆராதனை செய்யக்கூடாது என்று தடைவிதித்தனர்.
இது குறித்து கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தினுடைய வழக்கறிஞர்கள் திரு சரவணன் D.பெட்ரிக், திரு பால் நாகராஜன், திரு ஆஸ்டின் அவர்கள் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அப்பொழுது Advocate சரவணன் D.பெட்ரிக், Advocate பால் நாகராஜன் வழக்கிற்கு சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்திற்கு
ஆஜறானோம்.
அங்கே திரு :பிரான்சிஸ் ஆஜரானார் பிறகு அவிநாசி காவல் துறை ஆய்வாளர் K. R. அருள் தாசில்தார் ஜெகநாதன் இருவரும் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதி அரசர் சரமாரியாக கேள்விகளை கேட்டார்கள். அதன் பிறகு கோயம்பத்தூர் நீதிமன்றத்தில் RDO அவர்களும் ஆஜரானார்கள்.
காவல்துறையும்,வருவாய்த்துறையும் தங்களது வரம்பை மீறி செயல்பட்டுள்ளனர் என்றும் ,இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கோடிட்டு காட்டி , இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மதவழிபாட்டு உரிமை உள்ளதென்றும், வீட்டில் கிராமத்தினருடன் ஜெபம் செய்ய எவ்வித அனுமதியும் பெறவேண்டியதில்லை என்றும், மாநில அரசாங்கம் பாதிக்கப்பட்ட திரு. பிரான்சிஸ் அவர்களுக்கு ரூபாய் 50000 ஐ வழங்கவும் , அவர் செய்யும் ஆராதனைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்ஆணைய நீதிபதி திரு. ஜெயச்சந்திரன் உத்திரவிட்டுள்ளார்.
தலைவர்
வழக்கறிஞர்.
சரவணன் D.பெட்ரிக்
9003388030