
கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி
கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி

மதசார்பற்ற இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமூக ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கி பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிசேஷ ஊழியம் செய்ய, எவ்விடத்திலும் கைப்பிரதிகளை கொடுக்க, வாடகை கட்டிடங்களில் சபை நடத்த உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மனித உரிமை அமைப்பு பல்வேறு சட்ட அனுமதியையும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் போதகர்கள், திருச்சபைகள் தாக்கப்படும் போது, அல்லது மிரட்ப்படும் போது தேவ ஊழியர்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள சட்டத்தில் நமக்கு உள்ள உரிமைகள் மூலம் நீதி பெற்றிட நீதியின் குரல் என்ற அமைப்பு ( Voice of Justice Tamilnadu) தமிழகமெங்குமுள்ள கிறிஸ்தவ வழக்கறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் ஒன்றிணைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட போதகர்கள், திருச்சபைகளுக்கு உதவிட தன்னார்வமாக பணி செய்ய முன் வந்துள்ளார்கள்.
போதகர்கள், ஊழியர்கள், தங்களுக்கு சபை சார்ந்த பிரச்சனைகள், திருச்சபை அனுமதி பெறுதல், ஜெப வீடு நடத்த அனுமதி போன்ற சட்ட பிரச்சனைகளை அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
தலைமை அலுவலக முகவரி
நீதியின் குரல் அலுவலகம்
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்
கெத்செமனே ஜெப மையம் ஷா காம்ப்ளக்ஸ்,
திருவனந்தபுரம் ரோடு,
பாளை பேருந்து நிலையம் அருகில்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 627002.
இந்த முகவரில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் உங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள். போதகர்கள், ஊழியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது குறித்த சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்கள் பேசிய காணொளி:
இந்த அற்புதமான தகவலை உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
மேலும் தகவல் பெற
Adv.ஆரோக்கிய மேரி. M. L,
தொடர்பு எண்: செல் . 6381894211
அலுவலக தொடர்பு: 0462 3558511