தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி
Latest Post
  
News
  
World
  

தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி

எகிப்து நாட்டிலுள்ள தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழப்பு

எகிப்து; Aug 14, 2022

எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அலுவலர்கள் தெரிவித்தனர்.

கெய்ரோ (எகிப்து): எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 14) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 55 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அலுவலர்கள் கூறுகையில், அபு செஃபைன் தேவாலயத்தில் அதிக மக்கள் இருந்தனர் எனத் தெரிவித்தனர். மேலும் இந்த தேவாலயம், இம்பா என்ற பகுதிக்கு அருகில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவாலயத்தில் உண்டான தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இது குறித்து எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிஸ்ஸி, காப்டிக் தேவாலயத்தின் கிறிஸ்தவ போப் இரண்டாம் டவாட்ராஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.தேவாலயத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எகிப்து அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.