தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்து தந்த மதிப்பிற்குரிய கால்டுவெல் அவர்களை ஒருமையில் பேசியதோடு அவர் எழுதிய புத்தகமும் புனைசுருட்டு என்றும் அடாவடித்தனமாக பேசியிருக்கிறார் எச் ராஜா அவர்கள் மொழியியல் பற்றி எதுவும் அறியாத இவருக்கு கால்களைப் பற்றி என்ன தெரியும் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியதோடு வெளியே போங்கள் என்று உரத்த தொனியில் ஆக்ரோஷமாய் எழும்பினார்

நம்மை வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறுகிறார் என்று செய்வது அறியாமல் பத்திரிக்கையாளர்கள் திகைத்து நின்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 12 ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது எச் ராஜா அவர்கள் பேசிய இந்த வார்த்தைக்கு கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சரவணன் அவர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் முழு கண்டன தொகுப்பு வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது