இலங்கையில் பணியாற்றிவந்த இயேசு சபையைச் சேர்ந்த மிஷனெரி லலொயிட் லோறிஸ் தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் ஆங்கிலேயரின் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசம் வெள்ளையர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் அரும்பணியாற்றிய மிஷனெரிகளில் இவர் முக்கியமானவர். இவர் ஒரு அருட்தந்தை மட்டுமல்ல கணித மேதை, தொழில் நுட்ப புரட்சியாளர், தலைவர்களை உருவாக்கும் தலைவர் என அடுக்கடுக்கான சிறப்பு பெயர்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

இலங்கையில் மின்சார வசதியில்லாத காலப்பகுதியில் கிராம மக்கள் மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக சூரிய சக்தியிலான மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.

1927 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர் இயேசு சபை மிஷனெரியாக 1947ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். அன்று முதல் தனது இறுதிக்காலம் வரை தனது மிஷனெரி பணிதளத்திலேயே தங்கியிருந்த அருட்தந்தை லலொயிட் லோறிஸ் அர்ப்பணிப்புடன் இறைப்பணியையும் சமூக பணியையும் செய்து மட்டக்களப்பில் வயது முதிர்வின் காரணமாக தனது 94 வது வயதில் 2021 மார்ச் 9 அன்று இளைப்பாறுதலுக்குள் கடந்து சென்றார். தன் சொந்த தேசத்தை துறந்து இலங்கை மண்ணில் பல போராட்டங்களுக்கிடையே இறுதிமூச்சு இறைப்பணியாற்றிய இவரது சரீரம் இன்று இலங்கையிலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டுள்ளது. இவர் தான் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கைக்கு வந்த கடைசி மிஷனெரி என்பது குறிப்பிடத்தக்கது.

சுயத்தை வெறுப்பதும், இறை சித்தம் செய்வதும், பிறர் நலம் விரும்புவதுமே இவரது வாழ்கையாக இருந்தது என மெய்சிலிர்த்து கூறுகின்றனர் இவரை அறிந்த சிலர்..

மெய்சிலிர்க்கச்செய்யும் இவரது வாழ்வினை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. நாம் வாழும் காலத்தில் தேவனுக்கும் சமூகத்திற்கும் நம்மால் இயன்ற நற்பணியை தன்னலமில்லாமல் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை வாழ்க்கை பாடமாக கொடுக்கும் இக்காணொளியை தவறாமல் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..