வேலூர் அருகே ஊழியம் செய்து கொண்டிருந்த 15 பேரை சிறைபிடித்த கிராம மக்கள் ஊழியர்களின் தலையில் விபூதி குங்குமம் பூசி அராஜகம் நடந்துள்ளது

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் அருகே உள்ள கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் இவர் தனக்கு அறிமுகமான 15 பெயருடன் அருகில் உள்ள சின்ன சேரி கிராமத்திற்குள் ஆண்டவரை சென்றடையும் வழி என்ற வாசகம் பொருந்திய நற்செய்தி பிரதியை அங்குள்ள மக்களுக்கு அன்போடு விநியோகித்தனர் இதனை அறிந்த சிலர் ஒன்று திரண்டு சுமார் 15 ஊழியர்களையும் சுற்றிவளைத்து இங்கு ஏன் வந்தீர்கள் எதற்காக வந்தீர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து கிராம மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவே காவலர்கள் வரத் தாமதமானதால் இவர்களே அதிரடி நடவடிக்கையில் இறங்கினர் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது அவர்கள் மனதை காயப்படுத்தும் வண்ணம் விபூதி குங்குமம் ஆகியவற்றை அவர்கள் மீது கட்டாயப்படுத்தி பூசி மனித உரிமை மீறலில் ஈடுபட்டு உள்ளனர் மேலும் ஊழியர்கள் வந்திருந்த வாகனங்களை தாக்கியும் மோசமான வார்த்தைகளினால் வசைபாடியும் ஊழியர்களை அவமானப்படுத்தி உள்ளனர்
பின்னர் அங்கு விரைந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி தலைமையில் 50 காவலர்கள் குவிக்கப்பட்டனர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பினரும் சமாதானத்தோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கிறிஸ்தவர்கள் விரும்பாத ஒரு செயலை கட்டாயப்படுத்தி செய்தது மதமாற்றமா அல்லது அன்போடு இதை வாங்கி வாசித்துப் பாருங்கள் என்று சொன்னது மதமாற்றமா தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர் இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள உரிமை கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? என்ற கேள்வியை சமூகத்தின் முன்பாக வைக்கப்படுகிறது.
வீடியோ தொகுப்பு கீழே உள்ள link இல் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஜெபிப்போம் ஜெயத்தை காண்போம்.
நன்றி.,tcnmedia.in