
மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டிற்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவ பழங்குடியினர் மீது மதவெறி வன்முறையாளர்கள் சுமார் 30 பேர் திடீர் தாக்குதல் நடத்தியதில் கூட்டத்திலிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரு கலைந்து சம்பவ இடத்திலேயே இரத்தம் தரையில் வழிந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திக்ரி தாலுகாவில் உள்ள டெவ்ரி என்ற கிராமத்தில் கடந்த 2020 டிசம்பர் 31ம் தேதி ஒரு வீட்டில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அந்நேரத்தில் திடீரென்று நுழைந்த மதவெறி அமைப்பினர் சுமார் 30 பேர் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் லீலா என்பவரின் வயிற்றில் உதைத்தனர். இதனால் சம்பவ இடத்திலேயே இரத்தப்போக்கு ஏற்ப்பட்டு தரை முழுவது இரத்தம் வழிந்தது. அதிர்ச்சியடைந்த கணவன் ரமேஷ் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அந்த கைபேசியை பிடுங்கினா். வலியில் துடித்த தன் மனைவியை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அருகிலுள்ள கிராமத்திற்கு ஓடி சென்று ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுக்குள் இருந்த குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்து கூறியுள்ளனர். இந்த நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காவல் துறையில் ஆதாரங்களுடன் வழக்குபதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகியும் சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அறிந்த ஊர் மக்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொந்த வீட்டில் பிராத்தனை நடத்தியவர்கள் மீது மதவெறி கொண்டு தாக்குதல் நடத்தி பிறக்கவிருந்த குழந்தையை கொலை செய்த இந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்குமா? மதசார்பற்ற நாட்டின் புனிதம் காக்கப்படுமா?
கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கு தடைவிதித்தவர்கள் இன்று பிராத்தனைக்கும் தடைவிதிக்க முயற்ச்சிக்கிறார்களோ?
உரிய நீதி கிடைக்கும் வரை இந்த வீடியோவை பகிருவோம். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க கருத்தாய் ஜெபம் பண்ணுவோம்.