ஸ்பெயின் தேசத்தில் கிழிக்கப்பட்ட வேதாகமம்; பின்னர் நடந்ததை கேட்டா ஆச்சரியப்படுவீங்க..
News
  
World
  

ஸ்பெயின் தேசத்தில் கிழிக்கப்பட்ட வேதாகமம்; பின்னர் நடந்ததை கேட்டா ஆச்சரியப்படுவீங்க..

TRUE HISTORY ?

ஸ்பெயின் தேசத்தில் வேதாகம சங்கத்தில் பணியாற்றிய ஒருவர் பரிசுத்த வேதாகமத்தை குறைந்த விலைக்கு மக்களுக்கு கொடுக்கும்படியாக ஒரு கிராமத்திற்குச் சென்றார்.

அந்த கிராமத்திலிருந்த ஒரு மரத்தடியில் நின்று அவர் சத்தமாக பாடல்களைப் பாடவே, அதைப் பார்க்கும்படியாக அங்கிருந்த கிராம மக்கள் கூடினர்.

அவர் பாடல் பாடிமுடித்ததும் பரிசுத்த வேதாகமத்தை தனது கையில் எடுத்து இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை சத்தமாக வாசித்தார்.

அதைக்கேட்ட அநேகர் குறைந்த விலை கொடுத்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கினர்.

இதைப்பார்த்து கோபமடைந்த அந்த ஊரின் குள்ளச்சாமியார் ஒருவர், சபிக்கப்பட்டவர்கள் எழுதிய இந்த வேதாகமத்தை யாரும் வாசிக்ககூடாது என்றுச் சொல்லி அந்த ஊழியர் கையிலிருந்த வேதாகமத்தை பிடுங்கி கிழித்துப்போட்டார்.

மேலும் வேதாகமத்தை வாங்கினவர்களையும் அதட்டி அதை அந்த ஊழியரிடமே திரும்பக் கொடுத்துவிடும்படி செய்தார்.

மிகவும் மனவேதனையுடனும் கலக்கத்துடனும் ஊழியர் வீட்டிற்க்கு திரும்பிச் சென்றார்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அங்கிருந்த ரொட்டிக்கடை வியாபாரி, குள்ளச்சாமியார் கிழித்துப் போட்ட வேதாகமத்தை எடுத்து தனித்தனி தாள்களாக கிழித்து தான் விற்பனை செய்யும் கேக் துண்டுகளை அந்த தாளில் வைத்து ‘அந்த கிராம மக்களுக்கு கொடுத்தார்.

குள்ளச்சாமியார் கிழித்துப் போட்ட வேதாகம தாள்களைப் பார்த்த கிராம மக்கள் அநேகர் அதை வாசிக்க ஆரம்பித்தனர். வேத வசனம் கிரியை செய்ய ஆரம்பித்தது.

குள்ளச்சாமியாருக்கும் கிழிக்கப்பட்ட வேதாகமத்தின் தாளில் வைத்து ஒரு கேக் துண்டை அந்த ரொட்டிக்கடை வியாபாரி கொடுத்தார்.

அதை வாசித்த அந்த குள்ளச்சாமியாரும் இயேசு கிறிஸ்துவால் தொடப்பட்டார்.

சில நாட்களுக்கு பின்பு அந்த வேதாகம சங்க ஊழியர், அந்த கிராமம் வழியாக வேறொரு கிராமத்திற்கு செல்ல நேர்ந்தது.

வேதாகமத்தை தமது சைக்கிளில் வைத்துக்கொண்டு அந்த ஊழியர் அந்த கிராமத்தை கடந்து செல்கையில் எல்லா கிராம மக்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

அநேகர் குறைந்த விலை கொடுத்து பரிசுத்த வேதாகமத்தை வாங்கிச்சென்றனர்.

வேத வசனத்தால் தொடப்பட்ட குள்ளச்சாமியாருக்கும் வேதத்தை வாங்கிப்படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அந்த ஊழியரை நோக்கி ஓடி வந்தார்.

அவர் ஓடிவருவதைப் பார்த்த அந்த ஊழியர், மீண்டும் குள்ளச்சாமியார் வேதாகமத்தை கிழித்து விடுவார் என்று எண்ணி வேகமாய் ‘ சைக்கிளை மிதிக்கத்தொடங்கினார்.

அவரை விரட்டிப்பிடித்த குள்ளச்சாமியார், வேத வசனம் தன்னோடு பேசியதை விளக்கிக்கூறி, தனக்கான வேதாகமத்தை குறைந்த விலைகொடுத்து வாங்கிச்சென்றார்.

இதைப்பார்த்த அந்த கிராமமே ஆச்சரியத்தில் மூழ்கிப்போனது.

ஆம் , இன்றும் கடவுளின் வார்த்தைகளை வாசிக்கின்ற ஒவ்வொருவருடனும் ஆண்டவர் பேசுகின்றார்.

வேதத்தை நேசிக்கின்ற உங்களோடும் ஆண்டவர் பேசுவார். உங்கள் எதிர்காலம், பிள்ளைகள் திருமண காரியங்கள், தொழில், வேலை வாய்ப்பு, ஊழியம், சரீர ஆரோக்கியம் இன்னும் பல காரியங்கள் குறித்து பேசுவார். ஆமென்.

Pr. Sargunam, FB Page