Viral Video

திருச்சி: 28.3.2022

சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் ஜான் ராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் பிஷப். ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது:சென்னையில் இன்று பள்ளி வாகனம் மோதி பலியான இரண்டாம் வகுப்பு மாணவர் மரணமடந்த கோர சம்பவம் நடந்துள்ளது. ஒரே மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு மிகப்பெரிய இழப்பு. ஆனால் தான் ஒரு கிறிஸ்தவ சிஎஸ்ஐ மதுரை எனக்கு கல்லறை தோட்டம் இடம் தாருங்கள் என்று சொல்லி ஒரு திருச்சபையை அணுகியுள்ளனர்.

திருச்சபையால் சந்தா, ரசீது கேட்டு இடம் தர மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தாய் கொதிச்சு போய் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டியுள்ளார். நீங்கதான் கிறிஸ்தவரான உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. ஒரு குழந்தையை நான் பறி கொடுத்து இருக்கிறேன். அந்த குழந்தையை புதைக்க இடம் தர மாட்டேங்கறீங்க என்று சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இது மிகவும் வருந்தத்தக்கது. ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்திற்கு தலைகுனிவு.

கிறிஸ்தவம் என்றாலே அன்பையும் அறிவையும் கல்வியையும் உதவிக்கரம் நீட்ட கூடியவர்கள், ஈவு இறக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மற்றவர்கள் வியக்கத்தக்க தான நிகழ்வாக அந்த மாணவனை இழந்த தாயுடைய பேச்சு மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர் போனால் நாம் அடக்கம் செய்ய வேண்டியது கல்லறை. நீங்கள் சபைக்கு பாகுபாடு பிரிவை காட்டி கல்லறைத் தோட்டம் கொடுக்க மறுத்தால் இனிவரும் காலங்களில் திருச்சபை கூடாரம் காலியாகி வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஒரு காட்சி பொருளாகத்தான் திருச்சபை இருக்கும். இன்றைக்கு மக்கள் பாரம்பரியமாக நம் திருச்சபை என்று சொல்லி அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பிளவுபடுத்தி புறக்கணிக்கிறார்கள்.

ஈஸ்டர் வரப் போகுது. இன்னும் ஒரு பத்து நாள் இருக்கு. ஆனா இந்த மாதிரி வந்து நீங்க ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை பறிகொடுத்து விட்டார். ஒரு தாய் தன் குழந்தையை புதைக்க இடம் கொடுக்காமல் நீங்க கல்வி நிறுவனம் நடத்தி என்ன செய்ய போறீங்க. பெரிய கல்லூரி எல்லாம் நடத்தி என்ன பண்ண போறீங்க. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிஷனரிகள் வந்து நடத்தி தியாகம் செய்து உருவாக்கி அந்த திருச்சபைகள் இன்றைக்கு வெளியில் வந்து வேதனையான ஒரு சம்பவத்தை செய்து வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே எந்த ஊர்ல எந்த கிறிஸ்தவர் மரித்தாலோ அடக்கம் பண்ணுவதற்கு உடனடியாக இடம் தாங்க. அப்படி நீங்க கொடுக்கலைன்னா அரசு மயானத்தில் போய் எரித்து விடுவார்கள். அங்கும் இடம் கிடையாது.. அதைச் செய்ய விரும்புகிறீர்களா. இல்ல கல்லறைத் தோட்டத்திற்கு இடம் கொடுக்கிறீர்களா என்பது கேள்விக்குறி. இதை மனதில் வச்சுக்கங்க.

உண்மையிலேயே நான் இயேசுவை விசுவாசிக்கிறேன். கிறித்துவத்தை விசுவாசிக்கிறேன் என்று சொல்லக்கூடிய திருச்சபைகள் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள். குறிப்பாக நான் சுமார் 1500 திருமணங்களை நடத்தி இருக்கிறேன். 25 ஆண்டுகளில். அதுல ஒருத்தர் பெண் கிறிஸ்தவனாய் இருப்பார். மணமகன் இந்துவாக இருப்பார். ஆனால் அவர்கள் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கேட்பார்கள். அவர்களுக்கு எந்தவிதமான சாக்கு போக்கு சொல்லாமல் நான் நடத்திக் கொடுத்து இருக்கிறேன். அந்த திருமணங்கள் எல்லாம் அரசு துறையில் பதிவு செய்யப்பட்டு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறோம். கல்லறைக்கு இடம் தரவில்லையென சொல்லி அந்த பெண் ஆதங்கப்படுவது ரொம்ப வேதனையாக இருக்கு.

அதனால் இனிமே நீங்க உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த நேரத்தில் சொல்லி என்னுடைய வருத்தத்தையும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு திருச்சியை சார்ந்த பிஷப் ஜான் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.