Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm
கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து அனைத்து ஆலயங்களும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடக்கின்றன.
தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் ஆலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அனைவரும் முகக்கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் ஊர்வலம் நடத்துவது வழக்கம்.
தெறிக்க விட்ட திருமா; நீதித்துறை வட்டாரம் ஷாக்!
அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கிறிஸ்மஸ் தாத்தாக்கள் அணிவகுப்பு அலங்கார ரதங்கள் அணிவகுப்பு கேரளாவின் புகழ்பெற்ற ஆண்-பெண் சிங்காரி மேளம் நாட்டுப்புற கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் நிகழ்வுகளுடன் துவங்கியது.
புண்ணியம் சந்திப்பு பகுதியில் இருந்து நெடுங்குளம் வரை ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இறுதியில் ஊர்வலம் விழா மேடைக்கு சென்றது.
வேற ரூட்டில் பயம் காட்டிய போலீஸ்; மாரிதாஸ் ஷாக்!
விழா மேடையில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கேக் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் கிறிஸ்தவ வட்டார இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.