விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா?

தடுப்பு மருந்து எடுப்பதில் தவறில்லை. ஏனெனில் காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் மூலிகை மருந்துகளால் ஆனா கசாயம் தடுப்பு மருந்தாக இன்றும் பயன்படுகிறது. சீனாவில் பாம்பு கடித்தால் அல்லது எந்த விசத்திற்கும் தப்ப புத்த துறவிகள் snake venom என்கிற பாம்பின் விசப் புரதத்தை தடுப்பு மருந்தாக அருந்துவர். இப்படி காலம் காலமாக தடுப்பு மருந்துகள் ஒவ்வொரு நாட்டின் முறைகளின் அடிப்படையில் தடுப்பு மருந்துகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இந்த தடுப்பூசி போட்டு கொள்ளலாமா? அதை தொடர்ந்து கவனிப்போம்.

முதன் முதலில் இந்த தடுப்பூசி முறை ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவ மருத்துவரால் அதுவும் ஒரு போதகரின் Rev Stephen Jenner இன் மகன் edward ஜென்னர் ஆல் கண்டுப்பிடிக்கப் பட்டது. இந்த எட்வர்ட் ஜென்னர் தான் father of vaccinology என்று அறியப் படுகிறார். இவர் small box அல்லது cow pox என்று அறியப் பட்ட சின்னம்மை நோயினால் தனது சிறு வயதில் பாதிக்கப் பட்டபோது பிறரால் பரியாசம் பண்ணப்பட்ட போது அதியே அவர் சவாலாக கொண்டு வாழ்நாளில் மருத்துவராக மாறி 1798 இல் கிறிஸ்துவின் சமூகத்தில் இருந்த போது இயேசு கிறிஸ்து தரையில் துப்பி சேரு உண்டாக்கி குருடனின் கண்ணில் தடவி அவனை சிலோவாம் குளத்தில் கழுவ சொன்ன வசனத்தின் அடிப்படையில் உதித்த ஞானத்தால் cowpox fluid ஐ எடுத்து ஒரு சிறு பையனின் உடம்பில் தடவினார். தடவப் பட்ட இடத்தில் மட்டும் cow pox வந்து மறைந்து போகவே அதின் அடிப்படையில் vaccine ஐ கண்டுபிடித்த பின்னர் கிட்டத்தட்ட 200 வருடங்கள் தாண்டி 1979 வருடத்தில் கிருமியை கொண்டே கிருமியை அழிக்கும் முறையில் ஒரு systamatic முறையில் முழு உலகத்திலும் இந்த தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் லூயிஸ் பாஸ்டர் இதே வழிமுறையை பின்பற்றி தான் 1897 மற்றும் 1904 களில் காலரா போன்ற வியாதிகளுக்கு தடுப்பூசி முறைக்கு வித்திட்டார். பின்னர் பிளேக், மலேரியா மற்றும் போலியோ போன்ற வியாதிகளுக்கும் இதே முறையில் 19 ஆம் நூற்றாண்டுகளில் தடுப்பூசி முறை அறிமுகம் செய்யப்பட்டு பல நீண்டக்கால சோதனைகள், எதிர்ப்புகள், தடைகள் மற்றும் விமர்சனங்களை தாண்டி சரியான நேரத்தில் முழு உலகில் அங்கீகரிக்கப்பட்டு இன்றும் பயன்படுத்த பட்டு வருகிறது.

Covid 19 இதே முறைகளில் தான் உருவாக்கப் பட்டும் இருக்கிறது. ஆனால் இதன் நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்குறியாக பார்க்க படுவதற்கு காரணங்கள் என்ன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலில் இதன் வியாபார மற்றும் அவசர கோலம். அன்றைய தடுப்பூசிகள் யதார்த்த நிலைகளில் வியாதியின் தாக்கம் அனுசரித்து குறிப்பிட்ட காலம் எடுத்து சரியான பிரதிபலன் அல்லது பலன் அடைந்த பிறகே அவைகள் அனுமதிக்க பட்டது. ஆனால் இன்று இவைகள் நேரடியாக மனிதனிடம் சோதிக்கும் அளவில் அவசர கோலத்தில், நாங்கள் தான் முதலில் கண்டுபிடித்தோம் என்கிற அறிவு செருக்கின் அடிப்படையில் அமைந்ததால் தான் இங்கு பெரும் சந்தேகம் எழுகிறது.

இதனுடைய மூலக்கூற்றுல் எழுந்த சந்தேகங்கள் இன்னும் தெளிவுபடுத்த படவில்லை. இந்திய நாட்டின் வழிபாட்டின் தாக்கமும் இதில் இருக்கலாம் என்கிற சந்தேகமும் இருக்கிறது. கிறிஸ்தவ நாடுகள் மற்றும் மேலை நாடுகள் அதன் ரகசியத்தை பிற நாடுகளோடு பகர்ந்து கொடுக்கவும் இன்னும் முன்வர வில்லை. ஏனெனில் அங்கு கண்டுபிடிக்கப் பட்ட PFizer, modorna போன்ற மருந்துகள் அதிக பலனை கொடுப்பதாக செய்திகள் சொல்கிறது.

நமது நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட covaxin இன்னும் internationl நிலைகளில் அங்கீகரிக்கப்படவும் இல்லை. நமது அரசாங்கமும் சரியான பொறுப்பு ஏற்கவில்லை. உத்தரவாதம் கூட கொடுக்க வில்லை. அவரவர் ரஸ்க் அல்லது பொறுப்பில் தான் இந்த தடுப்பூசி எடுக்க நிற்பந்திக்கப்படுகிறது.

இவைகளினால் ஏற்பட்ட பக்க விளைவுகள் மற்றும் mood ஸ்விங் இன் அடிப்படையில் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் இன்னும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சில அரசியல்வாதிகள் விளம்பரத்திற்காக எடுத்து கொண்டது போலவும் தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சில மருத்துவர்கள் எடுக்கலாம் என்றும், தனிப்பட்ட விதத்தில் சிலர் ஆட்சேபனை தெரிவித்தும் இருக்கிறார்கள்.

எனவே இந்த சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்?

A. பதட்டத்தை தவிர்த்து விசுவாசத்தில் வளர வேண்டும்.

கிறிஸ்துவின் நம்பிக்கையில் பெருக வேண்டும். கிறிஸ்துவின் வார்த்தையின் வல்லமை, கிறிஸ்துவின் நாமத்தில் உள்ள வல்லமை, அவரது இரத்தத்தின் வல்லமை மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமையை உணர்ந்து அறிந்து கொள்ளுங்கள். விசுவாசம் நிதானத்தை மற்றும் உறுதியை தரும்.

B. அவசரப்படாமல் பொறுமையோடு இருந்து நிதானித்துக் கொள்ளுங்கள்.

எல்லாரும் சொல்வதற்காக, எடுக்கவேண்டும், இல்லையெனில் பாதிக்கப் படுவோம் என்று அவசரத்தில் எதையும் செய்ய வேண்டாம். நிதானம் மிகவும் முக்கியம். பொறுமை மிகவும் அத்தியாவிசியம். கிருபையை சார்ந்து கொள்வோம். மருந்து எடுத்தாலும் எடுக்கவிட்டாலும் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் தருவது கர்த்தர் என்கிற நம்பிக்கை வரட்டும்.

C. பரிசுத்த ஆவியின் உணர்வு மற்றும் அவரது ஞானத்திற்கு விட்டுக் கொடுங்கள்

பிறர் சொல்வதற்காக அல்ல, உங்களுக்குள் இருக்கும் ஆவியானவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். அவர் ஞானத்தை உணர்த்தும் ஆவியானவர். அவரே தீர்மானம் எடுக்க உதவி செய்வார். அவர் வார்த்தையை கொண்டு நம்மோடு பேசுவார். இருதயத்தில் சமாதானத்தை கட்டளை இடுவார். உள் சமாதானம் மற்றும் தேவ சமூகத்தின் உறுதியின் அடிப்படையில் தீர்மானம் எடுத்து செயல்படுங்கள். ஏனெனில் உங்களை நன்கு அறிந்தவர் பரிசுத்த ஆவியானவரே.

D. பயம், நடுக்கம், தடுமாற்றம், பிற உபாதைகள் இருந்தால் தவிர்த்து விடுங்கள்.

தீர விசாரித்து, ஆராய்ந்து பார்த்து, உள்ளுணர்வின் அடிப்படையிலும், இருதய சமாதானத்தின் அடிப்படையிலும், விசுவாசத்தின் அடிப்படையிலும் நல்ல மருத்துவர்கள் ஆலோசனைப் படி உங்களுக்கு சமாதானம் என்று தெரிந்தால் எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் இருதயத்தில் வாஞ்சைகள் மற்றும் விருப்பத்தை தருவது அவரே. பிற வியாதி மற்றும் கேடுகள் இருந்தால் தவிர்த்து விடுங்கள்.

கர்த்தர் இன்னும் நம்மோடு கூட இருக்கிறார். விழித்து இருப்போம். உலகத்தின் முடிவு பரியந்தம் அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கையின் பாதையில் செல்வோம். தொடர்ந்து ஜெபிப்போம். வசனத்தை நம்புவோம். பரிசுத்த ஆவியின் ஏவுதலுக்கு கீழ்படிந்து தேவ சித்தம் செய்வோம். கர்த்தர் நல்லவர்.

செலின்