
சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி
சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி உதவியும் நினைவு பரிசும் வழங்கினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (25.6.2021) அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஃபுல் காஸ்பெல் பெந்தகோஸ்த் மிஷன் இயக்கத்தின் தலைவரும் போதகருமாகிய. எ. சுவர்ணராஜ் மற்றும் மூத்த அறங்காவலர்கள் பாஸ்டர். டி. தயானந்தன் (JEMS Church), பாஸ்டர். டி. மோகன் (NLAG, India) பாஸ்டர். ஐசக் டேனியல் (JEMS Church) ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 30 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். உடன் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு. இனிகோ இருதயராஜ் அவர்களும் இருந்தார்கள்.
பின்னர் முதல்வரை சந்தித்த பாஸ்டர். ஐசக் டேனியல் அவர்கள் முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபங்களின் கைப்பட வேதாகமம் எழுதி உலக சாதனை படைத்த இவர், உலக சாதனைக்காக திரு.ஸ்டாலின் எழுதிய வேதாகம வசனத்தின் மூல பிரதியை நகலெடுத்து நினைவு பரிசு வழங்கினார்.
திரு. ஸ்டாலின் அவர்கள் உலக சாதனை கையெழுத்து வேதாகமத்தில் தன் கைப்பட எழுதிய வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”
யோசுவா 1:5
