பேராயர் எஸ்றா சற்குணம் இல்லத்திற்கு நேரடியாக வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின், 83வது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று பொன்னாடை அணி வித்து, மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.