Christian World achievers

காண்போர் கண்களை குளமாக்கிய வீடியோ பதிவு இது. இது ஒரு பகிர்வு செய்தி என்றாலும் நம் மனதில் யோசிக்க வைக்கும் சிந்தனைகளையும் ஏற்படுத்துகிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆம்! பணமல்ல மனமிருந்தால் போதும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லை என்றாலும் ஆண்டவரை ஆராதிக்க முடியும். தேவனை ஆராதிக்க சரீர ஊனம் ஒரு தடையில்லை என்பதற்கு இந்த அற்புதமான காணொளி ஓர் பகிரங்க சாட்சியாய் இருக்கிறது.

பல வேதனைகளையும் சோதனைகளையும் தன் வாழ்வில் சுமந்து நிற்கும் இந்த சகோதரி நம் ஆண்டவரை ஆராதிக்கும் அழகைப் பார்க்கும் போது நாம் இன்னமும் குறை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.

இந்த காணொளியில் காணும் சகோதரியை பற்றிய விபரங்கள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் மனதார வாழ்த்துகிறோம். அனேகருக்கு பாரமாக அல்ல பாடமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்றால் மிகையாகாது.

பலர் வாழ்வில் மாற்றங்களை கொடுக்கும் அரிய காணொளியானது சமூக ஊடகங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.  உங்கள் நண்பர்களுக்கு இப்பதிவை பகிந்து கொள்ள விரும்பினால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

இந்த செய்தியை வீடியோவாக பாருங்கள்