எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா

திருச்சி
27, டிசம்பர் 2021

எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் திருச்சபைகள், எல்ஷடாய் அமைப்பு சார்ந்த திருச்சபைகள், அதின் தலைவர்கள், பேராயர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர்.

தமிழக அரசு சார்பாக மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான திரு கே. என் நேரு அவர்கள் விழாவினை தலைமையேற்று சிறப்பித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்து செய்திகளை வழங்கி கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்ஷடாய் சர்வதேச பேராயத்தின் பிரதம பேராயர் கெனடி ராஜ்குமார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.