August 04, 2022

சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்!

நெல்லை மாவட்டம் அணைந்த நாடார் பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திம் தாலுகா, இடைகால் பஞ்சாயத்து அணைந்தநாடார்பட்டி என்ற கிராமத்தில் ரோட்டின் மேலே “பிற மதத்தினர் ஊருக்குள் சென்று மதப் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை இப்படிக்கு ஊர் மக்கள்” என விளம்பர பலகை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வைத்துள்ளனர். இந்திய அரசியமைப்பு சட்டப்படி நாட்டின் எந்த பகுதியிலும் யார் வேண்டுமாலும் சுதந்திரமாக இறைப் பணி செய்யலாம் என்ற சூழ்நிலையில் மேற்கண்ட கிராமத்தில் இப்படி ஒரு விளம்பர பலகையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வைத்துள்ளது நாம் சுதந்திர இந்தியாவில் தான் உள்ளோமா? சிறுபான்மை மக்கள் மிகவும் பாதுகாப்பாகவும், அனைத்து மதத்தினரும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் தான் வாழுகிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

அணைந்தநாடார் பட்டி கிராமத்தில் உள்ள விளம்பர பலகையை உடனடியாக அகற்ற ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் தெரிவித்துள்ளார்.


குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு