COVID ALERT சபைப் போதகர்களுக்கு

?உங்கள் திருச்சபையின் குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள்,இல்லையேல் விரைந்து உதவிடுங்கள்


?வழக்கமாக வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு, மருந்து வாங்க காசு இல்லையேல் கொடுத்து உதவுங்கள்.


?போதகர்கள் , எந்த மருத்துமனைகளில் எவ்வளவு படுக்கை இருக்கிறது என்பதை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்


?online ஆராதனைகளில், covid குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக நேரம் ஒதுக்குங்கள்


?திருச்சபை இருக்கும் கிராமத்தில் வேற்று மத மக்களையும் கவனியுங்கள்.


?மிஷனரிகளுக்கு அனுப்பும் காணிக்கையை, ஆராதனை முடக்கத்தை காரணம் காட்டி முடக்கிவிடாதீர்கள்


?ஏழை ஊழியர்கள், ஏழை சபைகளை கண்காணியுங்கள். அங்கும் தேவையுண்டு


? உற்சாகமிருந்தால், வெளிமாவட்டம், வெளி மாநிலம் என உதவியை விரிவுபடுத்துங்கள்.


?fixed deposit இருந்தாலும் எடுத்து உதவி செய்யுங்கள், காலத்திற்கு உதவாத பணம், கடலில் பெய்யும் மழை போன்றதே.


? எது எதற்கோ, காணிக்கை பிரிக்கிறோம், கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு உதவ, உற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்தில் காணிக்கை கேளுங்கள்.


? தங்கள் அருகிலிருக்கும் ஏழை மக்களுக்கு உதவ சபைமக்களை உற்சாகப்படுத்துங்கள்.


? போதகர்கள், முடிந்த அளவுக்கு அத்தியாவசியமற்ற நிகழ்வுகளைத் தவிருங்கள், மக்கள் அழைத்தாலும் புரிய வையுங்கள், அடக்க ஆராதனைகளில் அரசாங்கம் அறிவுறுத்துகின்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்து சொல்லுங்கள்.


? உதவி செய்ய வசதியற்ற சபைகள், ஜெபம் என்னும் உதவியை, ஆறுதலை பிறருக்கு கொடுங்கள்


அன்புடன்: மெர்லின்@நல்ல நிலமாகு நண்பா.