
ஜன 30, 2021
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, காந்திபுரத்தில், சி.எஸ்.ஐ., தேவாலயம் மற்றும் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது. பாதிரியார் எபிநேசர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பாதிரியார் ஸ்டேன்லி குமார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல செயலாளர் பாதிரியார் ரிச்சர்டு துரை, பொருளாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், சமுதாய கூடத்தை திறந்து வைத்து பேசினார். கோவை திருமண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர், தேவாலயத்தை திறந்து வைத்து அருளுரை வழங்கினார். கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல குழு உறுப்பினர் ஜான், கவுந்தப்பாடி சி.எஸ்.ஐ., திருச்சபை உறுப்பினர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர்