தமிழக அரசுக்குப் பேரிடர் காலக் கோரிக்கைகள்:
21.04.2021

  1. ஞாயிறு முழு அடைப்புக்குப் பதில், கிறிஸ்தவ வழிபாட்டுக்குத் தடையில்லாமல் மாற்று ஒழுங்குகள் செய்தல் வேண்டும்.
  1. வழிபாட்டுத் தலங்களில் 6அடி இடைவெளி என்ற SOPயையும், அதிகபட்சம் 200பேர் என்பதையும் மாற்றி, 50% இருக்கைகள் பயன்படுத்தலாம் என்று அனுமதித்தல் வேண்டும். (அடைக்கப்பட்ட A/C திரையரங்குகளுக்கே 50% attendance வழங்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத் தலங்களிலும் 50% attendanceக்கு அனுமதி தரவேண்டும்.)

3. கிறிஸ்தவ ஆலயங்களில், ஏற்கெனவே வழக்கமாக நடைபெற்று வருகிற, வருடாந்தர சிறப்பு கூடுகைகள் 50% attendanceல் நடத்த அனுமதித்தல் வேண்டும். (குடமுழுக்கு, கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதுபோன்று இதற்கும் வழங்கப்பட வேண்டும்.)

4. முகக்கவசம் தொடர்ந்து அணிவதால் பல பாதிப்புகள் வருவதால், மக்கள் நெருக்கமாக கூடும் பொது இடங்களில் மட்டுமே Face Mask அணிய கட்டாயப்படுத்த வேண்டும். தங்கள் சொந்த வாகனங்களில் அமர்ந்து பயணம் செய்வோரையும், போதிய இடைவெளி விட்டு நிற்போரையும், உணவு உண்ணச் செல்வோரையும் … Face Mask அணியக் கட்டாயப்படுத்தக் கூடாது.

5. COVID-19 தடுப்பூசி போடுமுன்னர், ஒவ்வொரு தனிநபருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள அரசு ஆவன செய்யவேண்டும். தடுப்பூசி போடக் கட்டாயப்படுத்தக் கூடாது.

6. தமிழகம் இயற்கை மருத்துவ வளங்களைப் பெற்ற மாநிலம். எனவே, தரமான கபசுரக்குடிநீர் மற்றும் அதுபோன்ற நோய் தடுப்பு மருத்துவங்களை அரசே முன்னெடுத்து வினியோகிக்க வேண்டும்.

7. கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து; Markets, Bus Stations, Bus Stops உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலக & மருத்துவமனை வளாகங்கள், அனைத்துப் பொதுக் கழிப்பறைகள் மற்றும் நீராடும் ஸ்தலங்கள், Buses, Trains உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தையும் அனுதினமும் சுத்திகரித்து, சிறப்பான சுகாதாரம் பேணவேண்டும்.

8. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மக்களிடம் மதிப்புடனும், பண்புடனும் நடந்து கொள்ள தமிழக அரசு அறிவுறுத்துதல் வேண்டும்.

  1. பெருந்தொற்று மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றின உண்மைத் தகவல்கள் அனுதினமும் சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் மூலம், அனைத்து ஊடகங்கள் மூலமாக மக்களைச் சென்றடைய வழிவகை செய்தல் வேண்டும்COVID-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துவது, உரிய மருத்துவம் அளிப்பது போன்றவற்றில்:
  • அந்த நபரின் சரீரத்தில் காணப்படும் இதர நோய்கள் மற்றும் குறைபாடுகளைக் கண்டறிதல்
  • அவர்களை சார்ந்திருக்கின்ற சிறுபிள்ளைகள், முதியோரின் நிலவரங்கள்
  • அடைக்கப்பட்ட வீடுகளில் தங்கியுள்ளோரின் உணவு மற்றும் அத்தியாவசிய காரியங்களுக்கான உதவிகள் ஆகியவை மனிதநேயப் பார்வையுடன், நல்ல முறையில் செய்யப்பட வேண்டும்.
  • தமிழக அரசு இப்பேரிடர் காலத்தில் வர்த்தக வளர்ச்சிக்கும், வருமான வளர்ச்சிக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மக்களது உயிர் பாதுகாப்புக்கும், சுகாதாரத்துக்கும், கூடவே வழிபாட்டு உரிமைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
  • தமிழக மக்களில் மிகப் பெரும்பாலானோர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள் என்பதையும்; குறிப்பாக, இத்தகைய பேரிடர் காலங்களில் அதிகமான இறைவழிபாடுகள் மற்றும் இறைவேண்டல்கள் செய்ய மிகவும் விரும்புபவர்கள் என்பதையும் தமிழக அரசு கருத்தில் கொண்டு, வழிபாட்டுக் காரியங்களுக்குத் தடைகள் நேராமல் கவனித்து ஆவன செய்தல் வேண்டும்.