சென்னை: இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா சமுதாய தொண்டு நிறுவனருமான டாக்டர் பால் தினகரன் வெளியிட்ட செய்தி குறிப்பு:

இயேசு பிறந்தபோது இருளிலிருந்து ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். அவர் உதித்தபோது ராஜாவிற்கு உரிய நட்சத்திரம் வானிலே உதித்தது. இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாம் இருளிலும், இல்லாமையிலும், தனிமையிலும் தவிக்கும் மக்களுக்கு இருள்போக்கும் இயேசுவின் நட்சத்திரமாய் அனைவரும் உதவி செய்தே கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்.

கிறிஸ்துமஸ் நாயகர் இயேசுவின் நல்லாசி அனைவருக்கும் பெருகட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.