International Christian Current News 24×7

அமெரிக்கா; 12 ஜனவரி 2022

FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES

உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் தனது 80 வது வயதில் 12, ஜனவரி 2022 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இந்த செய்தி இன்று உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்களுக்கு சோகத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வூட் தனது 80வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 30, 2021 அன்று புற்றுநோயைக் கண்டறிந்தார். உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக, செயின்ட் லூயிஸில் உள்ள சைட்மேன் கேர் சென்டரில் அவர் தொடர்ச்சியான கீமோதெரபி மற்றும் மருத்துவ சோதனை மருந்து சிகிச்சைகளை கடந்த 4 மாதங்களுக்கு மேல் மேற்கொண்டார். இந்நிலையில் வயது முதுமையின் காரணமாக சிகிச்சைக்கு பலனின்றி, தேவனால் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் தன்னை உருவாக்கிய தேவனை சந்திக்க புறப்பட்டு சென்றுவிட்டார்.


வூட் அவர்கள் மிசோரியை தளமாகக் கொண்ட யு.எஸ். அசெம்பிளிஸ் ஆஃப் காட் இன் 13 வது பொது தலைவர்களில் நான்காவது நீண்ட காலம் பணியாற்றிய பெரும் தலைவராக இருந்தார், இந்த இயக்கம் இன்று 107வது ஆண்டில் உள்ளது.

பத்தாண்டு காலம் பதவியில் இருந்த அவர் தனது 75 வது வயதில் ராஜினாமா செய்தார்.

வூட் அவர்கள் ஒரு சாதாரண மிஷனரி தம்பதியருக்கு பிறந்த மகன். அத்தகைய சாதாரண நிலையிலிருந்து உலகளாவிய அசெம்பிளிஸ் ஆஃப் காட் இயக்கத்தின் பொது தலைவராக உயர்ந்தது நம்மை வியப்படைய செய்கிறதல்லவா? ஆம் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்க செய்ய தேவன் வல்லவராக இருக்கிறார்.

உலக அளவில் பிரபலமான இவாஞ்சல் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டம் பெற்றவர் என்ற பெருமை இவரையே சாரும். முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவரும் இவரே. மேலும் தனது அன்றாட வேலைகளில் கணினியைப் பயன்படுத்தி மாபெரும் பணிகளை செய்து முடித்தார்.

வூட் அவர்களின் மிஷனரி பெற்றோர்களான ஜார்ஜ் ராய் வுட் மற்றும் எலிசபெத் வீட்மேன் ஆகியோரின் மகன் ஆவார், அவர்கள் 1932 இல் சீனாவில் திருமணம் செய்துகொண்டனர். 1949 இல் அமெரிக்காவிற்குத் திரும்பிய பிறகு, அவர்களின் மகன் பிறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜார்ஜ் ராய் வுட் அவர்கள் சுவிசேஷகர்களாகப் பயணம் செய்தார்.

5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜார்ஜ் ஆர்.வுட், தனது மகனைக் கல்லூரியில் சேரும்படி வற்புறுத்தினார். தனது மகன் எவாஞ்சல் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம் பெற வேண்டும் என பரிந்துரைத்தார். ஆனால் மகனோ எவாஞ்சல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றதோடு மட்டுமல்லாமல், முனைவர் பட்டமும் பெற்று, இயக்குனராகவும் உயர்ந்தார். வூட் 1965-71 வரை எவாஞ்சல் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் மாணவர் வாழ்க்கையின் இயக்குநராக பணியாற்றினார்.

வூட் அவர்கள் தான் மருத்துவமனையில் இருக்கும் தனது சரீர நிலையைப் பற்றி ஃபேஸ்புக் புதுப்பிப்புகள் மூலம் பின்தொடர்பவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அவரது இதுதான்.

லூயிஸில் உள்ள பார்ன்ஸ் மருத்துவமனையிலிருந்து வூட் அவர்கள் ஒரு டிவிட் எழுதினார்.

“”இங்குள்ள அற்புதமான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் நான் பலமுறை கூறியுள்ளேன், எனக்கு இரண்டு சிறந்த மாற்று வழிகள் உள்ளன. ஒன்று ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள வீட்டிற்குச் செல்வது, மற்றொன்று பரலோகத்திற்கு செல்வது. நான் குணமடையவில்லை என்றால், எனக்காக ஜெபிக்கும் அனைத்து மக்களின் நம்பிக்கையின்மையால் அல்ல” என்று சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அவரது சரீரத்தில் ஒருபுறம் வயது முதுமை, மற்றொருபுறம் புற்றுநோயின் தீவிரம். கொடூரமான சூழல்நிலை அவரை சூழ்ந்திருந்தும் அவரோ மிக மகிழ்ச்சியாக, மிக இயல்பாக, மிக சுறுசுறுப்புடன் தனது ஊழியத்தை நிறைவேற்றினார்.

கடந்த டிசம்பர் 2021 இல் ஏஜி நியூஸில் தனது வாரிசான டக் க்ளேயுடன் வெளியிடப்பட்ட நேர்காணலில், வூட் அவர்கள் தேவனிடமிருந்து தான் உணர்ந்த சமாதானத்தை அதிகமாய் வலியுறுத்தினார், மேலும் அவர் உடல் ரீதியாக பலவீனமாக இருந்தபோதிலும் தனது ஊழிய காரியங்களில் தான் மிகவும் வலிமையானவராகவே உணர்ந்தார்.

சங்கை வூட் அமெரிக்க ஏஜி சபைகளின் தலைவராக இருந்த காலத்தில் தான் அமெரிக்கா மட்டுமல்லாது உலகமெங்கும் ஏஜி என்னும் பெந்தேகொஸ்தே ஸ்தாபனம் அதிவேகமாக வளர்ந்தது. ஆம் இவர் ஒரு மாபெரும் சகாப்தம்.

கூடுதலாக, வூட்டின் பதவிக் காலத்தில், யு.எஸ். பெல்லோஷிப்பில் பெண் போதகர்களின் சதவீதம் 19.2% இல் இருந்து 24.3% ஆக அதிகரித்தது.

வூட், தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை மிசோரி, ஓசர்க்கில் கழித்தார், பொது தலைவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகுஊழியங்களில் பிஸியாக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல், அவர் உலகின் மிகப்பெரிய பெந்தேகோஸ்தே அமைப்பான வேர்ல்ட் அசெம்பிளிஸ் ஆஃப் காட் அமைப்பில் தலைவராக இருந்தார், 160 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் 70 மில்லியன் ஆதரவாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 2014 ஆம் ஆண்டு முதல் அவர் பணியாற்றியதைப் போலவே, எம்பவர்டு21 என்ற இயக்கத்தின் உலகளாவிய இணைத் தலைவராகவும் பணியாற்றினார், இது அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவர் சந்திப்பதற்காக உழைக்கும் பெந்தேகோஸ்தே தலைவர்களை ஒன்றிணைக்கிறது. மேலும் ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள அவரது அல்மா மேட்டர் எவாஞ்சல் பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார்.

தன் வாழ்நாளில் சிறிய அளவிலும் சர்வதேச அளவிலும் நூற்றுக்கணக்கான பொறுப்புகளில் அங்கம் வகித்திருந்தும் இவர் குற்றம் சாட்டப்படாத போதகராக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கிறார்.

நற்செய்தி அறிவித்தல், சபைகளை ஸ்தாபித்தல், மிஷனெரிகளை அனுப்புதல், ஊழியர்களை உருவாக்குதல், நிர்வாக திறன் போன்றவைகள் இவரது தலைசிறந்த பண்புகளாகும். யார் தன்னை சந்திக்க விரும்பினாலும், எப்பொழுது சந்திக்க விரும்பினாலும் அவர்களை புன்சிரிப்புடன் வரவேற்று சந்திக்கும் குணம் கொண்டவர்.

இவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து ஏராளமான ஊழியங்களை செய்துள்ளார். இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பல சந்தர்ப்பங்களில் வந்து ஊழியங்களை நிறைவேற்றியுள்ளார்.

தேவன் தனக்கு குறித்த / கொடுத்த வாழ்நாட்களை கறைதிரையற்றதாய் ஓய்வின்றி உழைத்து, அவருக்காகவே செலவிட்டு இன்று தேவசமூகத்தில் இளைப்பாற சென்றிருக்கிறார்.

இத்தகைய மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது நமக்கு கிடைத்த பெருமையே. இவரது வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஏராளமான நல்ல பழக்கவழக்கங்களை உள்வாங்கிக்கொண்டு, நம் வாழ்வில் கைக்கொள்ள பிரயாசப்படுவோம். போதகரை இழந்து நிற்கிற போதகரின் குடும்பத்தாருக்காக, உடன் ஊழியர்களுக்காக தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள். தேவன் அவர்களை ஆறுதல்படுத்துவாராக.

இந்த சரித்திர மாமனிதரின் வாழ்க்கை குறிப்புகளை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மறவாதிருங்கள்.


Former Assemblies of God general superintendent George Oliver Wood died Jan. 12 after a 4½-month struggle with stage 4 cancer.

Wood received a cancer diagnosis on Aug. 30, 2021, two days before his 80th birthday. He underwent a series of chemotherapy and clinical trial drug treatments at Siteman Care Center in St. Louis for the cancer in his esophagus, which had spread to his liver and vertebrae. The treatments were discontinued after disastrous side effects.

Wood left office in 2017 as the fourth longest-serving leader out of the 13 general superintendents of the Missouri-based U.S. Assemblies of God, which is now in its 107th year.

He resigned at the age of 75 after a decade in the post. Wood became the first general superintendent to have been a missionary kid, the first to graduate from the AG’s Evangel University, the first with an earned doctorate, and the first to use a computer in his daily work. Wood kept followers updated about his hospitalized condition via upbeat Facebook updates.

“I have said so many times to the wonderful nurses and doctors here that I have two great alternatives,” Wood wrote in a post on his 15th day at Barnes Hospital in St. Louis in November. “One is to go home in Springfield and the other is to go home to heaven…. If I am not healed, it certainly is not from a lack of faith either on my part or of all the people who are praying for me.”

Despite his suffering, Wood continued to remain cheerful. In a December 2021 interview published in AG News with his successor Doug Clay, Wood reiterated the peace he felt from the Lord, and how he felt the strongest he’d ever been spiritually even though he was physically weak.

But Wood took a turn for the worse this week, contracting non-covid pneumonia. His family surrounded him at his bedside before he died.

REMARKABLE GROWTH
During Wood’s tenure as leader, the U.S. Fellowship experienced consistent numerical growth. The U.S. AG grew to a then-record number of adherents, 3,240,258, under Wood’s leadership — a rise from 2,863,265 a decade earlier. The number of U.S. AG churches rose to an all-time high of 13,023, an increase from 12,362 in 2007.

He helped move the AG to a more diverse body that better reflected the nation’s overall demographics. The Fellowship became one of the most ethnically diverse denominations in America, with 42.3% of adherents representing ethnic minorities when he left office, compared to 36.9% when he began.

Prayer for racial reconciliation became one of the priorities of his governance. He left as leader of a 21-member Executive Presbytery that included seven ethnic minorities and two females — compared to 14 men, all white, when he took office.

In addition, during Wood’s tenure, the percentage of women ministers in the U.S. Fellowship increased to 24.3% from 19.2%.

Under Wood’s leadership as general superintendent, a number of initiatives started, including AGTrust, which has raised over $23 million for church planting and revitalization, scholarships, and multiple new initiatives and resources. The Church Multiplication Network also launched, leading to 3,307 congregations added to the Fellowship in 10 years. Other ministries founded during his decade of leadership included Acts 2 JourneyCenter for Holy Land Studies, and My Healthy Church.

Wood, who spent the last years of his life in Ozark, Missouri, kept busy after leaving the general superintendent’s post. Since 2008, he had been chairman of the World Assemblies of God Fellowship, the world’s largest Pentecostal body, with over 160 member countries representing 70 million adherents. He likewise continued to serve, as he had since 2014, as global co-chairman of Empowered21, a movement bringing together Pentecostal leaders working for all to have a Holy Spirit encounter.

He also served as interim president of his alma mater Evangel University in Springfield following the November 2020 retirement of Carol A. Taylor until new president Mike L. Rakes began his duties in the fall 2021 semester.

MISSIONARY ROOTS
Wood was the son of missionary parents, George Roy Wood and Elizabeth Weidman, who wed in China in 1932. After returning to the U.S. in 1949, eight years after their son’s birth, the Woods pastored small churches and traveled as evangelists.

George R. Wood, who had only a 5th grade education, urged his son to attend college. His father suggested he obtain a teaching degree from Evangel University rather than attend Central Bible College, in case he failed as a pastor. George O. not only graduated from Evangel, he went on to earn a doctoral degree in pastoral theology from Fuller Theological Seminary in Pasadena, California, and a juris doctorate from Western State University College of Law in Fullerton, California. He had been an ordained AG minister since 1967.

Wood served as director of spiritual life and student life at Evangel University from 1965-71, pastor of Mesa Church in Costa Mesa, California, for 17 years; assistant superintendent of the Southern California Ministry Network from 1988-93; and general secretary of the national AG from 1993 to 2007.

As general superintendent, the trained attorney championed religious liberties involving persecution of Christians worldwide, defending biblical principles in the U.S. and championing Christian rights in the public arena.

In 2009, Wood supported the General Council adding a fourth reason for being — compassion — to its list of evangelism, worship, and discipleship, with Convoy of Hope serving as the Fellowship’s preferred partner.

“We live in a culture in which the Church has to earn credibility, and without acts of compassion I believe the Church loses its credibility in the world,” Wood told the Pentecostal Evangel at the time.

At the 2017 General Council, Wood withdrew his name from contention for reelection as general superintendent. Voters subsequently elected Clay to the post. Wood had succeeded Thomas E. Trask, who chose to step down midway through his term, in 2007.

LASTING LEGACY
Clay, who served as AG general treasurer for 8 years under Wood, considered him a mentor and friend.

“George O. Wood’s legacy is that of being a man of the Word,” Clay said. “He had tremendous intellect, but never depended on that at the expense of being led by the Spirit.” Clay called Wood a bridge builder and Pentecostal statesman, well respected by Christian leaders of various denominations, as well as by AG leaders throughout the world.

“He had a unique ability to open doors for young people, women, and ethnic minorities by providing them a meaningful seat at the table,” Clay said. “That has been a major force behind our growth in each of those areas. His mentorship in my life was invaluable. Each leadership decision he made was always processed through Scripture. He made my love for the Bible even richer. His legal credentials gave him a unique perspective to address cultural issues with biblical clarity.”

Wood and his wife, Jewel, celebrated 56 years of marriage on Dec. 27. They raised two children. Son George Paul Wood is executive editor of Influence, the AG periodical for ministry leaders. Daughter Evangeline Hope Zorehkey lives in Ozark.

Wood authored numerous books, including Roadtrip Leadership, Living in the Spirit, A Psalm in Your Heart, Fearless, Living Fully, and The Successful Life. Many of the sermons he preached are available at georgeowood.com.

TAGS: GEORGE O. WOOD DOUG CLAY CANCER SITEMAN CARE CENTER EVANGEL UNIVERSITY WORLD ASSEMBLIES OF GOD FELLOWSHIP EMPOWERED21 CAROL TAYLOR MIKE RAKES RACIAL RECONCILIATION CHURCH GROWTH RELIGIOUS LIBERTY THOMAS TRASK MESA CHURCH CONVOY OF HOPE GEORGE P. WOOD INFLUENCE MAGAZINE AGTRUST ACTS 2 JOURNEY CENTER FOR HOLY LAND STUDIES MY HEALTHY CHURCH ROADTRIP LEADERSHIP LIVING IN THE SPIRIT A PSALM IN YOUR HEART LIVING FULLY THE SUCCESSFUL LIFE

Thanks: AG News


பாழடைந்த பங்களாவில் முரடனும் D.L. மூடியும் என்ன ஆச்சு தெரியுமா?