
மதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை
தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சார்பில் யார் பங்கு பெற்றது?என்னென்ன பேசப்பட்டது?
கொரனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை 08.06.2020 முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.
இதனடிப்படையில் கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற 03.06.2020 புதன்கிழமை அன்று மாலை 4.45 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகம் பழைய கட்டிடம் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அனைத்து சமய தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்குபெற்றனர். இக்கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த அருட்தந்தையர்கள், புராட்டஸ்டண்ட் திருச்சபையை சேர்ந்த ஆயர்கள், பெந்தேகோஸ்தே திருச்சபையை சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கு பெற்ற போதகர் ஒருவர் அங்கு பேசப்பட்டதை விளக்குகிறார்.
முழு விபரத்தை அறிந்து கொள்ள இந்த வீடியோவை காணவும்