வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய செய்தி வெளியீடு:
கடந்த 29.06.2020 அன்று தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக சிறப்பு செய்தியை வெளியிட்டது. அரசு வெளியீடு எண் 451. இந்த அறிக்கையில் வழிபாட்டு ஸ்தலங்கள் திறப்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையானது பல்வேறு குழப்பங்களையும் கேள்விகளையும் அதிருப்தியையும் கிறிஸ்தவர்கள் நடுவில் ஏற்படுத்தியுள்ளது. இவைகளுக்கு தகுந்த பதில் கூறும்படி சென்னை கொளத்தூர் பகுதியில் நீண்ட காலம் தலைமை போதகராக செயல்பட்டு வரும் போதகர். தேவதாசன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
கேள்வி 1: கிராமபுறங்களிலுள்ள தேவாலயங்களை திறக்க அனுமதி வழங்குவதாக கூறிவிட்டு, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கை கட்டாயமாக்கி இருப்பது திட்டமிடப்பட்ட சதியா? இதில் மறைமுக சூழ்ச்சி உள்ளதா?
கேள்வி 2: வழிபாட்டு தலங்களை திறக்க கூடிவரும் மக்கள் எண்ணிக்கையை வைத்து நிர்ணயம் செய்யாமல் ஆண்டு வருமானத்தை கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதே ஏன்?
கேள்வி 3: ஆண்டு வருமானம் 10 ஆயிரத்திற்கும் குறைவாக அதாவது மாதம் 833 ரூபாய்கும் குறைவாக உள்ளவர்கள் தான் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதே. இதில் நியாயம் இருக்கிறதா?
கேள்வி 4 : கொரோனா தேவனின் நியாயத்தீர்ப்பா? அல்லது பிசாசு ஏற்படுத்திய தீயதிட்டமா? அல்லது இது தான் இறுதி காலமா? பலரும் பல வித கருத்துக்களை கூறும் நிலையில் உண்மையான பதில் என்ன?
விளக்குகிறார் போதகர். கலை தேவதாசன் (பெத்தேல் ஏ.ஜி சபை தலைமை போதகர், கொளத்தூர், சென்னை)