முழு வேதாகமத்தையும் தன் கைப்பட எழுதி  78 வயது தாயார் லீலாவதி அவர்கள் மாபெரும் சாதனை புரிந்துள்ளார்..

சிவகங்கை, மே 15, 2021

60 வயது கடந்து விட்டாலே வேதம் வாசிக்க பல்வேறு சாக்கு போக்குகளை கூறி நலுவ பார்க்கும் உலகில் தனது முதுமையினால் ஏற்படும் பெலவீனங்களிடையே அற்புதமான இந்த இந்த சாதனையை செய்துள்ளார் திருமதி. லீலாவதி அவர்கள்.

இந்த கையெழுத்து வேதாகமத்தின் கூடுதல் சிறப்பு என்பது பரிசுத்த வேதாகமத்தின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வேதாகமத்தை பிரதி எடுத்தது போல் அமைந்துள்ளது. ஒரு வார்த்தை கூட அங்கும் இங்கும் ஒதுங்காமல் கச்சிதமாக இந்த வேலையை செய்துள்ளார்கள்.

வேதாகமத்தை எழுத கண்களுக்கு வேலை, மூளைக்கு வேலை, கைகளுக்கு வேலை, குனிந்து எழுதுவதால் கழுத்து மற்றும் முதுகிற்கு வேலை என பல்வேறு வலிகளிடையே ஓய்வின்றி எழுதி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இனறு இவர்களை சந்திக்கவும் இவர்கள் எழுதிய வேதாகமத்தை பார்க்கவும் பலர் விரும்பி பார்த்து செல்கினறனர்.

02.09.2017 அன்று எழுத ஆரம்பித்த இந்த பணி இடையில் ஏற்பட்ட சரீர பெலவீனத்தால் 7 மாதங்கள் எழுத முடியாமல் போனது. இதுவெல்லாம் இந்த வயதிற்கு தேவையில்லாத வேலை என்ற எண்ணம் தோன்றினாலும் இலட்சியம் தோற்றுப்போகவில்லை. மீண்டும் எழுத ஆரம்பித்து 09 மார்ச் 2021 அன்று வெறறிகரமாக முழு வேதாகமத்தையும் எழுதி சாதனை புரிந்துள்ளார்.

தனது பலவீனங்களுக்கிடயே தனது 78 வது வயதில் சாதித்த இந்த தாயாரை தந்தை பெர்க்மான்ஸ் மற்றும் வேதாகம நண்பன் நிறுவத்தார் மற்றும் பலர் பாராட்டி வருகினறனர்.

திருமதி. லீலாவதி அவர்கள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள ஜெபத்தோட்ட திருச்சபையின் போதகர் பாஸ்டர். மோகன் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பது உலக மொழி. மற்றும் “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலி 4:13) என்பது வேத மொழி. இவ்விரண்டு கூற்றுகளையும் மெய்பிக்கும் வண்ணம் முழுவேதாகமத்தையும் தன் முதுமையின் நடுவில் கைப்பட எழுதி முடித்துள்ளார்கள்.

78 வயதினை கடந்தும் வேதாகமத்தை விட்டு பிரியாமல் இரவும் பகலும்  தியானித்து செயல்படும் இவர்களை மனதார நாம் பாராட்டுவோம். அதேநேரம் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்.? வேதாகமத்திற்கும் நமக்கும் இடையிலான உறவு எப்படியிருக்கிறது?

திருமதி. லீலாவதி அம்மையாரிடம் கேட்கப்பட்ட கீழ்கண்ட கேள்விகளுக்கு அற்புதமான பதில்களை கொடுத்துள்ளார்கள். வீடியோவில் பார்த்து அறிந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்

கேள்வி 1: அம்மா.. இந்த வயதில் பல பலவீனங்களிடையே இப்படியொரு கடினமான சவாலை துவங்க எப்படி தீர்மானித்தீர்கள்?

கேள்வி 2: அம்மா.. சவால் நிறைந்த இப்பணியை நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது உங்களை சார்ந்தவர்கள் உங்களை குறித்து கூறிய நேர்மறை/எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் உங்கள் சரீரத்தில் நீங்கள் சந்தித்த பெலவீனங்கள் என்னென்ன? அவைகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டீர்கள்?

கேள்வி 3: முழுவேதாகமத்தையும் உங்கள் கைப்பட எழுதி முடித்துவிட்டீர்கள்.. உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது. உங்கள் அனுபவங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு உங்களது ஆலோசனை என்ன?

இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அற்புத பதிவினை பகிர்ந்து கெள்ளுங்கள்.. நன்றி.