சென்னை,

ஜூலை.21

ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜெபக்கூட்டம் கோவை ஜோதிபுரத்தைச் சேர்ந்தவர் விட்டல்தாஸ், இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது எனக்கு சொந்தமான குடிசை வீட்டில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் ஜெபக்கூட்டம் நடத்தி வந்தோம். இந்தநிலையில் , கடந்த ஆண்டு ஜூலை மாதம் அங்கு வசித்து வந்த சிலர் ஜெபக்கூட்டம் நடத்தவிடாமல் தடுத்து எங்களை தாக்கினர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் வெற்றி வேல்முருகனிடம் அளித்தேன். புகார் அவர், எனது புகாரை சமாதான பேச்சுவார்த்தைக்காக கோவை வடக்கு தாசில்தார் சிவக்குமாருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் , அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மதசார்பற்ற நாடான இந்தியாவில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் வழிபாடு செய்து கொள்ள ஒவ் வொருவருக்கும் உரிமை உள்ளது , அந்த உரிமையை மறுப்பது மனித உரிமை மீறல் ஆகும் . எனவே , இன்ஸ்பெக்டர் , தாசில்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபராதம் இந்த மனுவை விசாரித்த டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது நீதிபதி மனுதாரர் யாருக்கும் இடையூறு இல்லாமல் குடிசை வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவருக்கு உரிமை உள்ளது. சிலர் ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் அவரை தடுத்துள்ளனர். அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மனுதாரரால் தொடர்ந்து ஜெபக்கூட்டம் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மனித உரிமை மீறல் ஆகும் . இதற்காக வெற்றிவேல்முருகன்‌ தாசில்தார் சிவக்குமார் ஆகிய இருவருக்கும் சேர்த்து ரூ .50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கி விட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து தலா ரூ .25 ஆயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளலாம் . இன்ஸ்பெக்டர் குடிசை வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்த அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது . எனவே, குடிசை வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்துபவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது என்று மனுதாரரின் புகார் மீது அரசு அறிவுறுத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

சமீபித்திய செய்திகள்: