ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!
Latest Post
  
News
  
World
  

ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!

வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர். இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, பலர் கிறிஸ்துமஸ் சமயம், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் புத்தகங்களை பரிசாக அளிப்பர். பண கஷ்ட காலத்திலும் இது தொடர்ந்தது…’ என்கிறது, வரலாறு

ஐஸ்லாந்து நபர்களில், 10ல் ஒருவர், தன் வாழ்நாளில் கண்டிப்பாக புத்தகம் எழுதி விடுவார். இங்கு, மர்ம கதைகளுக்கு, ‘டிமாண்ட்’ அதிகம். இதனால், ஏகப்பட்ட மர்ம கதை எழுத்தாளர்கள் உள்ளனர் ஐஸ்லாந்தில் புத்தகம் வெளியிட்டால், அதில், 25 சதவீதத்தை அரசு ஏற்கும் பிரிட்டனில், கிறிஸ்துமஸ் சமயத்தில், தனிமையில் வாடுவோர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை மகிழ்விப்பர். சேவை இயக்கங்கள் மூலம், சில நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்கள் மனதை மகிழ வைத்து, தனிமையை விரட்ட உதவுகின்றனர்

Thanks: Dinamalar