Christian News in India, Christian News in Tamil Nadu

உச்சநீதிமன்ற நீதிபதியின் பணிக்கால நிறைவு தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் தனது பணிநிறைவில் “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறிப்பிட்டு பேசியுள்ளார்.

தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பானுமதி அவர்கள் இன்று (19, ஜூலை 2020) ஒய்வு பெறுகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற பார் தலைமை குழு தலைவர் சார்பில் கடந்த 17.07.2020 அன்று நீதிபதி பானுமதிக்கு பிரிவு விழா நடத்தினர். நீதிபதி பானுமதி தனது உரையை அனைவருக்கும் நன்றி தெரிவித்து தொடங்கினார். அவர் பேசியபோது, “தமிழகத்தில் ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன். எனது 2 வயதில் எனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது நாங்கள் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. எனது தாயார் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், பல செயல்முறை சிக்கல்களாலும், போதிய உதவியின்மையாலும் எங்களால் இழப்பீட்டுத் தொகையை பெற முடியவில்லை. நீதிமன்றத்தின் தாமதத்தாலும், அதன் செயல்பாடுகளில் உள்ள வேகமின்மையாலும் நானும் எனது தாயாரும், இரண்டு சகோதரிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். கடைசி நாள் வரை எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் மெய்சிலிர்க்கும் பல விஷயங்களை நினைப்பூட்டி பேசிய நீதிபதி பானுமதி “நான் இந்துவாக இருந்தாலும், இயேசுவின் நற்செய்தியை நம்புகிறேன். இயேசுவின் கிருபையால், நான் கல்வி கற்றேன், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தேன்.” என்று கூறினார்.

2014 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அவர் உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது பெண் நீதிபதியாவார். தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி என்னும் பெருமையும் இவர்களையே சாரும்.

சுமார் முப்பது ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றிய இவர் இந்தியாவின் மிக முக்கிய வழக்குகளை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவம் ஒரு மதமல்ல. கிறிஸ்து ஒர மத ஸ்தாபகரும் அல்ல. மதங்களுக்கு அப்பாற்ப்பட்டு இயேசுவை ரூசிபார்த்த நீதி தேவதையை பாராட்டுகிறோம்.