
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வகையில், திதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கிளினிக்கை திறந்து வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூபாய் 2 ஆயிரத்து 500 பொங்கல் பரிசை திமுக எதிர்க்கிறது என்றும், திமுக ஆட்சி காலத்திலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் என்ன இயேசு நாதரை சுட்டு கொன்ற கோட்சே வாரிசா என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thank you: Sathiyam Tv (30/12/2020 3:34)